SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

10 ரூபாய் நாணயம் கொடுத்த கண்டக்டருக்கு கத்திக்குத்து

2019-09-24@ 00:23:02

நவி மும்பை: சில்லரை பாக்கியை 10 ரூபாய் நாணயமாக கொடுத்த கண்டக்டரை கத்தியால் குத்திய பயணி கைது செய்யப்பட்டார்.மும்பை மாநகராட்சி போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றுபவர் ரமேஷ்வர்(25). கோபர் கைர்னேயில் இருந்து பன்வெல் சென்ற மாநகராட்சி பஸ்சில் ரமேஷ்வர் நேற்று பணியாற்றினார். அந்த பஸ்சில் தன்மே கவ்தேகர்(34) என்பவர்  பயணம் செய்தார். அவர் டிக்கெட் எடுக்க ₹20 கொடுத்தார். கண்டக்டர் ரமேஷ்வர் டிக்கெட் கட்டணம் போக பாக்கி 10 ரூபாயை நாணயமாக கொடுத்தார். அதனை தன்மே வாங்க மறுத்து ரூபாய் நோட்டாக கொடுக்குமாறு வலியுறுத்தினார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த தன்மே தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து ரமேஷ்வரை குத்தினார். இதனால் பஸ்சில் பரபரப்பு ஏற்பட்டது. சக பயணிகள் தன்மேயை பிடித்து போலீசில்  ஒப்படைத்தனர். கத்திக்குத்தில் படுகாயமடைந்த ரமேஷ்வர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-05-2020

    26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-05-2020

    25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-05-2020

    24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்