SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தொழிலதிபரை நிர்வாணப்படுத்தி மிரட்டி பணம் பறித்த கும்பல்: இளம்பெண் உள்பட 4 பேர் கைது

2019-09-24@ 00:22:58

திருவனந்தபுரம்: கேரளாவை சேர்ந்த தொழிலதிபரை நிர்வாணப்படுத்தி மிரட்டி பணம் பறித்த பெண் உட் பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.கேரளாவின் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் நசீர் (42, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கத்தார் நாட்டில் தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார். கத்தாரில் இவர் வசிக்கும் பகுதியில் எர்ணாகுளம் தோப்பும்படி பகுதியைச் சேர்ந்த மேரி வர்க்கீஸ் (26)  என்பவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் நசீருக்கும், மேரி வர்க்கீசுக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் நெருக்கமானார்கள். இதையடுத்து கடந்த மாதம் மேரி வர்க்கீஸ் தான்  வசிக்கும் பிளாட்டுக்கு வரும்படி நசீரை அழைத்துள்ளார். அவரும் அங்கு சென்றார். அப்போது அங்கு இருந்த ஒரு கும்பல் நசீரை மிரட்டி நிர்வாணப்படுத்தியது. அப்போது மேரி வர்க்கீசும் நிர்வாணமாக அவர் அருகில் முத்தம் கொடுப்பதுபோல் நின்றுள்ளார். இதை அந்த கும்பல் புகைப்படம் எடுத்துள்ளது. பின்னர் அந்த  புகைப்படத்தை காட்டி ₹50 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

கேரளா சென்று பணத்தை எடுத்து தருவதாக கூறி நசீர் அங்கிருந்து தப்பி வந்தார். எர்ணாகுளம் வந்த அவர் போலீஸில் புகார் அளித்தார். கும்பல் தலைவன் கொடுத்த வங்கிக் கணக்கில் 30 ஆயிரம் செலுத்தும்படி நசீரிடம் போலீசார் கூறினர்.  கண்ணூர் மாவட்டம் தளிபரம்பு பகுதியில் உள்ள ஒரு ஏடிஎம்மில் இருந்து அந்த பணம் எடுக்கப்பட்டதை போலீசார் கண்டுபிடித்தனர். பணம் எடுத்த கும்பல் பெங்களூர் சென்று கொண்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த கும்பலை பின்தொடர்ந்து சென்று கர்நாடக மாநிலம் மடிக்கேரியில் உள்ள ஒரு லாட்ஜில் வைத்து மடக்கி பிடித்தனர். விசாரணையில்  அவர்கள் கண்ணூரைச் சேர்ந்த சபாத் (25), அஸ்கர் (25), முகமது ஷபீக் (27) மற்றும் மேரி வர்க்கீஸ் (26) என தெரியவந்தது.இதுபோல் இக்கும்பல் மேலும் பலரை இதே பாணியில் மிரட்டி பணம் பறித்தது தெரியவந்தது. இக்கும்பல் அடிக்கடி கேரளாவில் இருந்து துபாய், கத்தார் உள்பட நாடுகளுக்கு சென்று அங்குள்ளவர்களை இதேபோல் மிரட்டி பணம் பறித்து  வந்துள்ளனர். போலீசார் அவர்களை கைது செய்து எர்ணாகுளம் சிறையில் அடைத்தனர். அவர்களை காவலில் எடுத்து விசாரித்தால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • siva5

    1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு!

  • death5

    கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்!!!

  • coronaa5

    புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்

  • locust4

    ராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு!: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை!!!

  • ingland4

    இங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்