SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமைச்சர்கள் பங்கேற்ற பணப்பலன்கள் வழங்கும் விழாவில் ஓய்வுபெற்ற போக்குவரத்து கழக ஊழியர் மயங்கி விழுந்து சாவு: நீண்டநேரம் காக்க வைத்ததாக புகார்

2019-09-24@ 00:06:00

சேலம்: சேலத்தில் அமைச்சர்கள் பங்கேற்ற விழாவில் ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக ஊழியர் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார். சேலம் ராமகிருஷ்ணா ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தில் ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான பணப்பலன்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்றுமுன்தினம் நடந்தது. இதில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், அன்பழகன், சரோஜா ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதில், தர்மபுரி மாவட்டம் கடத்தூரை அடுத்த ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக ஊழியர் மணி (60) என்பவரும் பங்கேற்றார். விழாவில் மணி திடீரென மயங்கி சுருண்டு விழுந்தார். அவரை சக ஊழியர்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

இது குறித்து தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் நிர்வாகிகள் கூறுகையில், ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு பணப்பலன்கள் வழங்கப்பட்டு வருகிறது. விழாவில் கலந்து கொள்வதற்காக ஓய்வு பெற்ற ஊழியர்கள் நீண்டநேரம் அமர வைக்கப்பட்டனர். இடையில் சாப்பிடுவதற்கு கூட எதுவும் தரவில்லை. பெரும்பாலும் வயதானவர்கள், அவர்களால் நீண்டநேரம் பசி தாங்க முடியாது. இதேபோல் மருத்துவ உதவிகளுக்கும் ஏற்பாடு செய்யவில்லை. இது போன்ற முன்னேற்பாடுகள் இல்லாததே ஓய்வு பெற்ற ஊழியரின் மரணத்துக்கு காரணம்,’’ என்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-05-2020

    26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-05-2020

    25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-05-2020

    24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்