SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உணவுக்குழாயில் நூடுல்ஸ் சிக்கி மசாஜ் சென்டர் பெண் சாவு?

2019-09-24@ 00:05:54

சேலம்: சேலத்தில் மசாஜ் சென்டரில் பணியாற்றிய மிசோரம் இளம்பெண் மர்மமாக உயிரிழந்தார். சேலத்தில் உள்ள மசாஜ் சென்டர்களில் மிசோரம், அசாம் போன்ற வடமாநில இளம்பெண்கள் பணியாற்றி வருகிறார்கள். சேலம் அழகாபுரத்தில் உள்ள மசாஜ் சென்டரில் மிசோரமை சேர்ந்த எஸ்தர்(28) பணியாற்றி வந்தார். நேற்றுமுன்தினம் இரவு வேலை முடிந்த நிலையில் அத்வைத ஆசிரம சாலையில் உள்ள வீட்டிற்கு சென்றார். அவருடன் பணியாற்றி வரும் அக்கா பேபி, மற்றும் சக தோழிகளுடன் இரவு மது குடித்துள்ளார். பின்னர் அனைவரும் ரெடிமேடு நூடுல்ஸ் சாப்பிட்டுள்ளனர்.

நேற்று காலை எழுந்து பார்த்தபோது, எஸ்தர் மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. அளவுக்கு அதிகமாக மதுகுடித்து விட்டு ரெடிமேடு நூடுல்ஸ் சாப்பிட்டதில் மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்தாரா? அல்லது  உணவு குழாயில் நூடுல்ஸ் சிக்கியதில் அவர் உயிரிழந்தாரா? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இதுகுறித்து பேர்லாண்ட்ஸ் போலீசார் விசாரிக்கின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • karvachauth_2019

    கணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்

  • 18-10-2019

    18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • RoboChefOdisha

    உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரோபோக்களை உணவு பரிமாறும் பணியில் ஈடுபடுத்தியுள்ள ஒடிசா உணவகம்: புகைப்படங்கள்

  • AIADMK48

    அதிமுகவின் 48வது ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து ஈபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை

  • KateWilliamNorthPak

    அரசு முறை பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து இளவரசர்: பழங்குடியினர் நடன நிகழ்ச்சியை கண்டு உற்சாகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்