SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கணவன், மனைவி இடையே தகராறு 8 மாதங்களாக பேசாத மகளுக்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை: கிராம மக்கள் மனதை நெகிழ வைத்த சம்பவம்

2019-09-24@ 00:05:42

முத்துப்பேட்டை:  திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த மாங்குடி மருதவனம் காலனி தெருவை சேர்ந்தவர் சிவக்குமார்(42). விவசாய கூலித்தொழிலாளி.  இவரது மனைவி அருள்மொழி(38). இவர்களுக்கு விவேகானந்தன் (15), நதியா (12) என்ற குழந்தைகள் உள்ளன. விவேகானந்தன் 10வதும், நதியா 7வதும் படித்து வருகின்றனர். கடந்தாண்டு கஜாபுயலின் கோரதாண்டவத்தில்  சிவக்குமார் வீடும்  இடிந்தது. இதனை ஓரளவு சரி செய்து குடியிருந்து வரும்  இவருக்கு, தொடர்ச்சியாக சரிவர வேலையும் கிடைக்கவில்லை. இதனால்  குடும்பத்தை நடத்த முடியாததால் சிவக்குமார், மனைவியிடம் அடிக்கடி சண்டை போட்டுள்ளார். இதனை நேரில் கண்ட மகள் நதியா, தன் தந்தையிடம்  பேசுவதை நிறுத்திவிட்டார். இப்படி கடந்த 8 மாதத்திற்கு மேலாக மகள் தன்னிடம் பேசாததை நினைத்து சிவக்குமார் வேதனையில் இருந்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன் மகளிடம் “நீ என்னிடம் பேச நான் என்ன செய்ய வேண்டும்” என்று கேட்டுள்ளார். அதற்கு அவர், “இனி நீ அம்மாவிடம் சண்டை போடக்கூடாது. நான் படிக்கும் பள்ளிக்கூடம் அருகில் உள்ள கருங்குளத்தில் உள்ள குப்பைகளை அகற்ற வேண்டும். அப்படி செய்தால் உன்னுடன் பேசுகிறேன்” என தெரிவித்துள்ளார். மகளின் அன்புக்காக களமிறங்கிய சிவக்குமார், கடந்த 2 நாட்களாக சரிவர சாப்பிடாமல் ஊர்குளத்தில் இறங்கி அதில் கிடந்த பிளாஸ்டிக் கழிவுகள், மரம் செடிகள் அனைத்தையும் அகற்றி அந்த குளத்தை முற்றிலும் சுத்தம் செய்தார். இதற்கு அவரின் மனைவி அருள்மொழி துணையாக இருந்துள்ளார்.  இதையடுத்து மகள் நதியா, தந்தையை கட்டி பிடித்து கன்னத்தில் முத்தமிட்டதோடு நேற்று முதல் பேச துவங்கினார். இச்சம்பவம் கிராம மக்களின் மனதை நெகிழ வைத்தது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • KimHorseRide1610

    பயேக்டு பனிமலைகளுக்கு இடையே வெள்ளைக் குதிரையில் பவனி வந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்: புகைப்படத்தொகுப்பு

  • NASASpaceSuit

    நிலவு பயணத்தில் பங்கேற்கும் விண்வெளி வீரர்களுக்கான 2 நவீன விண்வெளி உடைகள்: நாசா அறிமுகம்- புகைப்படங்கள்

  • AirQualityDelhi1610

    அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் வேளாண் கழிவுகளால் டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் காற்று மாசு: புகைப்படங்கள்

  • CatalanSpainProtest

    கட்டலான் தலைவர்களின் சிறைத்தண்டனைக்கு எதிர்ப்பு..: ஸ்பெயினின் பல்வேறு இடங்களில் வெடித்தது போராட்டம்!

  • LebanonWildFire1610

    கடுமையான வெப்பம் மற்றும் அனல் காற்றினால் லெபனானில் வரலாறு காணாத காட்டுத்தீ..: சர்வதேச நாடுகள் உதவ கோரிக்கை!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்