SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தலைதூக்கும் டெங்கு

2019-09-24@ 00:02:16

மழை பெய்தால் மண்ணுக்கும், மனதுக்கும் குளிர்ச்சி என்றாலும், மழைக்காலத்தில் வரும் நோய்களை கண்டு அச்சப்படத்தான் வேண்டியிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தை மிரட்டி வரும் டெங்கு காய்ச்சல், தற்போது மீண்டும் தலைதூக்கியுள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட 140க்கும் அதிகமான நாடுகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளது. இந்தியாவில் கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்திலும் டெங்குவின் தாக்கம் இருந்து வருகிறது. சென்னை, மதுரை, காஞ்சிபுரம், தேனி, கடலூர், கோவை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டும் வருகின்றனர். மழை பெய்த உடனே சுகாதாரத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்திருந்தால் டெங்குவை கட்டுப்படுத்தி இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது மாநிலம் முழுவதும் டெங்கு, மர்ம காய்ச்சல் ‘தீயாக’ பரவி வருகிறது.

டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்கள் நல்ல தண்ணீரில் தான் வளரும். பகலில் கடிக்கும் தன்மை கொண்டவை. டெங்குவில் இருந்து தப்பிக்க நிலவேம்பு கசாயம் குடிப்பது முக்கியம் என்பதால், பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை எந்தளவு நிலவேம்பு கசாயம் குடிக்கலாம் என்பது குறித்த விழிப்புணர்வை பள்ளி மற்றும் பொது இடங்களில் அதிகப்படுத்தலாம். இது ஒரு புறமிருக்க கர்நாடகா, தெலங்கானா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்திலும் பன்றிக்காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. டெங்கு, மர்மக்காய்ச்சலால் மக்கள் பாதிக்கப்படும் நிலையில், பன்றிக்காய்ச்சல் கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிகளவு உயிர் பலி மற்றும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. எனவே, டெங்குவை அதன் துவக்கநிலையிலேயே கட்டுப்படுத்த சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

கடந்தாண்டுகளில் எந்ெதந்த பகுதிகளில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது என்பதை கண்டறிந்து அந்த பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். பொது இடங்கள், பள்ளி, சுற்றுப்புறத்தில் தண்ணீர் தேங்கி நிற்காமல், தூய்மையாக இருந்தால் மட்டுமே டெங்குவை தடுக்க முடியும். கடந்த சில ஆண்டுகளை போலவே மீண்டும் டெங்கு, மர்மக்காய்ச்சல் பரவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனே அரசு எடுக்க வேண்டும். இல்லையென்றால் பல்வேறு பாதிப்புகளை மக்கள் சந்திக்க வேண்டியிருக்கும்.  உள்ளாட்சி நிர்வாகம் சீர்குலைந்து நிற்பதும் இதற்கு முக்கிய காரணம். தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை போல கடந்த காலங்களில் டெங்கு, மர்மக்காய்ச்சலுக்கு ஏற்பட்ட உயிர்பலிகளை கருத்தில் கொண்டு, இனி உயிர்பலி ஏற்படாது என்பதை உறுதிப்படுத்தும் வகையில், அரசின் நடவடிக்கைகள் அதி தீவிரமாக இருக்க வேண்டும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-05-2020

    24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-05-2020

    22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • Netaji_Subhash _Chandra_Bose_Airport In  Kolkata Got Damaged_In_Amphan_Cyclone

    கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் ஆம்பான் புயலால் சேதமடைந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்