SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பான் பசிபிக் ஓபன் ஒசாகா சாம்பியன்

2019-09-23@ 00:28:16

டோக்கியோ: பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா சாம்பியன் பட்டம் வென்றார். தனது சொந்த ஊரான ஒசாகாவில் நடைபெற்ற இந்த தொடரின் பைனலில் ரஷ்யாவின் அனஸ்டேசியா பாவ்லியுசென்கோவாவுடன் மோதிய நவோமி ஒசாகா 6-2, 6-3 என்ற நேர் செட்களில் எளிதாக வென்று கோப்பையை முத்தமிட்டார். இப்போட்டி 1 மணி, 9 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.கடந்த ஜனவரியில் ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ஒசாகா, அதன் பிறகு விளையாடிய எந்த தொடரிலும் பட்டம் வெல்ல முடியாமால் தடுமாறி வந்தார். தரவரிசையிலும் நம்பர் 1 அந்தஸ்தை பறிகொடுத்த அவருக்கு, பான் பசிபிக் ஓபனில் சாம்பியனானது புதிய உற்சாகத்தை கொடுத்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-10-2019

    20-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 19-10-2019

    19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • boniaredlady

    தனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்!

  • chisa

    தகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா

  • karvachauth_2019

    கணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்