SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காயத்தால் பைனலில் விலகல் தீபக் பூனியாவுக்கு வெள்ளி பதக்கம்

2019-09-23@ 00:28:10

நூர் சுல்தான்: உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் 86 கிலோ பிரீஸ்டைல் பிரிவு பைனலில் காயம் காரணமாக விலக நேரிட்டதால் இந்திய வீரர் தீபக் பூனியா வெள்ளிப் பதக்கத்துடன் திருப்தி அடைந்தார். கஜகஸ்தானில் நடைபெற்று வரும் இந்த தொடரின் இறுதிப் போட்டியில், 2016 ரியோ ஒலிம்பிக்சில் தங்கப் பதக்கம் வென்ற ஈரான் வீரர் ஹாசன் யாஸ்தானிசராட்டியுடன் மோதவிருந்த நிலையில், துரதிர்ஷ்டவசமாக தீபக் பூனியா காயத்தால் விலக நேரிட்டது. இதையடுத்து ஹாசன் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

2வது இடம் பிடித்த தீபக் வெள்ளிப் பதக்கம் பெற்றார். இந்த தொடரில் இந்தியாவின் வினேஷ் போகத், பஜ்ரங் பூனியா, ரவி தாஹியா ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றிருந்த நிலையில், தீபக் 4வது பதக்கமாக வெள்ளி வென்றார். இவர் இந்தியாவுக்கு ஒரு ஒலிம்பிக் ‘கோட்டா’ இடத்தையும் உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-10-2019

    15-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • MauCylinderBlastUP

    உ.பி.யில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • NorthEastSyriaTurkey

    சிரியாவின் வட கிழக்கு பகுதியில் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வரும் துருக்கி: அப்பாவி பொதுமக்கள் 9 பேர் உயிரிழப்பு!

  • DutchKingIndiaVisit

    அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து மன்னர்...: குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு- புகைப்படங்கள்

  • SaddleridgeFire19

    கலிபோர்னியாவில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் கொழுந்து விட்டு எரியும் தீ..: பல ஏக்கர் நிலம் நாசம், லட்சக்கணக்கானோர் வெளியெற்றம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்