SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முண்டகக்கண்ணியம்மன் கோயில் ரயில் நிலையம் பெயர் அழிப்ப

2013-06-19@ 01:02:33

சென்னை : பறக்கும் ரயில் மார்க்கத்தில் புதிதாக அமைய உள்ள  முண்டகக்கண்ணியம்மன் கோயில் ரயில்நிலையத்திற்கு வைக்கப்பட்டுள்ள பெயருக்கு ஏற்பட்டுள்ள எதிர்ப்பு காரணமாக, என்ன பெயர் வைக்கலாம் என்று தெரிவிக்கும்படி தமிழக அரசுக்கு தெற்கு ரயில்வே கடிதம் எழுதியுள்ளது. அப்பகுதியில் வசிப்பவர்கள் வள்ளுவர் சிலை என்று பெயர் வைக்க வலியுறுத்தி வருகின்றனர்.

சென்னை கடற்கரை , வேளச்சேரி பறக்கும் ரயில் மார்க்கத்தில் கலங்கரைவிளக்கம்,திருமயிலை ரயில் நிலையங்களுக்கு இடையில் முண்டகக்கண்ணியம்மன் கோயில் என்ற பெயரில் புதிய ரயில் நிலையம்  அமைக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் இந்த ரயில் நிலையம் 5 மாதங்களுக்கு முன்பே திறக்கும் நிலைக்கு தயாரானது. ஆனால் கழிவறை உள்ளிட்ட வசதிகள் உருவாக்குவதற்காக திறப்பு விழா தள்ளிப்போனது. கடந்த 12ம் தேதி ரயில் நிலையத்தை திறக்க முடிவு செய்து பணிகள் வேகம் பெற்றன.

சில நாட்களுக்கு முன் நள்ளிரவில் ரயில் நிலைய வளாகத்திற்குள் புகுந்த ஆசாமிகள், ரயில் நிலைய பெயர் பலகைகளில் உள்ள முண்டகக்கண்ணியம்மன் என்ற பெயரை சுண்ணாம்பால் அழித்து விட்டனர். மறுநாள் காலை பார்த்த ரயில்வே ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதிகாரிகள், பாதுகாப்பு படையினர் வந்து பார்த்தனர். ரயில் நிலையம் அருகில் உள்ள பகுதிகளில் விசாரணை நடத்தினர். ஆனாலும் முண்டகக்கண்ணியம்மன் கோயில் பெயரை அழித்தவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் தமிழக அரசுக்கும், தெற்கு ரயில்வேக்கும், கலெக்டருக்கும்,  பொதுமக்கள் பெயரிலும், வள்ளுவர் வட்டம், ஸ்ரீமாதவபெருமாள் சேவா சமிதி என பல்வேறு பெயர்களிலும் மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. அவற்றில் சிலர் முண்டகக்கண்ணியம்மன் கோயில் ரயில் நிலையத்திற்கு பதில் மாதவபெருமாள்கோயில் ரயில்நிலையம் என மாற்றும்படியும், மேலும் சிலர், ‘மயிலாப்பூர் ரயில் நிலையம்’ என பெயர் வைப்பதுதான் நல்லது என்றும் கூறியுள்ளனர்.

ஆனால் பெரும்பான்மையான மனுக்களில் புதிய ரயில்நிலையம் அருகில் வள்ளுவர் சிலை பஸ் நிறுத்தம் இருப்பதால் வள்ளுவர் சிலை ரயில் நிலையம் என்று பெயர் வைத்தால் பொருத்தமாக இருக்கும் என்று கூறியுள்ளனர். மேலும் சில மனுக்களில் Ôவள்ளுவர் பெயர் வைத்தால் எந்த மதத்தையும் சாராமல் பொதுவான பெயராக இருக்கும்Õ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக புதிய ரயில்நிலையம் திறப்பு விழாவை தள்ளி வைத்ததுடன், என்ன பெயர் வைப்பது என்பதை தமிழக அரசே முடிவு செய்து தெரிவிக்கும்படி தெற்கு ரயில்வே சார்பில் மாநில அரசு பொதுத்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

abilify and coke abilify maintena abilify and coke
cialis coupon codes coupons for cialis printable coupons for prescription medications
amoxicillin abraham.thesharpsystem.com amoxicillin dermani haqqinda

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்