SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இடைத்தேர்தலில் போட்டியிட ஆளுங்கட்சிக்குள் நடக்கும் அடிதடியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2019-09-21@ 01:42:15

‘‘கமிஷனுக்காக ஒரே பேக்கேஜ் சிஸ்டம் கொண்டு வந்திருக்கிறதா புகார் வருதே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘ஆமா.. விரிவா சொல்றேன்..தமிழக பொதுப்பணித்துறையில், 10, 15 பணிகளை ஒன்றிணைத்து பேக்கேஜ் முறையில் டெண்டர் விடும் வழக்கத்தை அரசு புதிதாக அமலுக்கு கொண்டு வந்திருக்கு... ஒவ்வொரு பணியையும் பிரித்து டெண்டர் விட்டால், கமிஷனை தனித்தனியே கான்ட்ராக்டர்களிடம் வசூலிக்க வேண்டியிருக்கு என்பதால், இப்படி மாற்றி அமைத்திருப்பதாக அதிகாரிகள் வெளிப்படையாக பேசிக்கிறாங்க.. ஆனா இதற்கு கான்ட்ராக்டரிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கு. பேக்கேஜ் சிஸ்டத்தை ரத்து செய்ய கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து நடந்து வரும் வேளையில், தற்போது வேலூர் கான்ட்ராக்டர்களும் கோர்ட்டிற்கு சென்றிருக்காங்களாம். இதேபோல பிற மாவட்ட கான்ட்ராக்டர்களும் கோர்ட்டிற்கு படையெடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருப்பதால், பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் என்ன செய்வதென்று தெரியாம முழிச்சிகிட்டு இருக்காங்களாம். இப்படி பேக்கேஜ் சிஸ்டம் பிரச்னை ஒருபுறம் இருந்தாலும், சில மாவட்டங்களில் யாருக்கு டெண்டரை கொடுக்க வேண்டும் என்பதில் உள்ளூர் அமைச்சர் மற்றும் ஆளும் கட்சி மா.செ.க்களுக்கிடையே கடும் மோதல் போக்கும் இருக்குதாம். எல்லாத்தையும் நாங்க தான் சமாளிக்க வேண்டியிருக்குனு அதிகாரிங்க புலம்பி தள்ளுறாங்களாம்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிட அந்த தொகுதியில் உள்ள அதிமுகவினரிடையே கடும் போட்டி நிலவி வருதாமே...’’ ‘‘ஆமா.. அந்த தொகுதியில் உள்ளவர்கள் ஒற்றுமை இல்லாமல் இருந்து வர்றாங்களாம்... இதனால் நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை அந்த தொகுதியில் உள்ளவர்களுக்கு கொடுக்காமல், பக்கத்தில் இருக்கும் தொகுதிகளை ேசர்ந்தவர்களுக்கு கொடுக்க அதிமுக தலைமை முடிவு பண்ணியிருக்காம்... பல கட்ட போட்டியிருந்துச்சாம்... கடைசியில் இரண்டு பேரில் ஒருவருக்கு அந்த தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று அதிமுகவில் பேச்சு அடிப்பட்டு வருதாம்... நெல்லைக்காரர் ஒருவருக்கும், திரைப்பட நட்சத்திர பேச்சாளருக்கும் இடையில் தான் அதிக போட்டி நிலவி வருதாம்... விரைவில் அந்த தொகுதியில் யார் போட்டியிட போறாங்க என்பதை அதிமுக தலைமை அறிவிக்க உள்ளதாம்’’ என்றார் விக்கியானந்தா.‘‘வசூல் வேட்டையில் புகுந்து விளையாடுகிறாராமே ஒரு பெண் அதிகாரி..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.

‘‘கோவை கல்வி மாவட்டத்தில் ஒரு பெண் அதிகாரி டிஇஓ பதவியில் உள்ளார். இவரை பார்த்தாலே தனியார் பள்ளிகள் உரிமையாளர்கள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் நிர்வாகிகள் எல்லாம் நடுங்கிப்போய் விடுகிறார்கள். இந்த பெண் அதிகாரியின் அலுவலகம், கோவை திருச்சி ரோடு ஒண்டிப்புதூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் இருக்கிறது. ஆனால், இவர், சத்தி ரோடு சரவணம்பட்டி விநாயகபுரம் பகுதியில் இருக்கும் அரசு துவக்க பள்ளியில் உள்ள ஒரு வகுப்பறையை ஆக்கிரமித்து, தனது ஆபீஸ்போல் உருவாக்கி வைத்துக்கொண்டுள்ளார். இந்த அறையின் சாவியை, தலைமை ஆசிரியரிடம் இருந்து வாங்கி தன்வசம் வைத்திருக்கிறார். இங்கிருந்தபடியே, தனியார் பள்ளி முதலாளிகளை வரவழைத்து, கோப்புகளை பெறுகிறார். ஆய்வு என்ற பெயரில், அதில் ஓட்டை, இதில் ஓட்டை என ஏதாவது ஒரு குறை கண்டுபிடித்து, வசூல் வேட்டையை ஜரூராக நடத்துகிறார். இவருக்கு உதவிசெய்ய இரண்டு புரோக்கர்கள் இருக்காங்க. இவங்க மூலமாகத்தான் டீலிங் முழு வீச்சில் நடக்குது. ஒரு தனியார் பள்ளிக்கு அப்ரூவல் கொடுக்க ரூ.1 லட்சம் முதல் ரூ.1.5 லட்சம் வரை கைமாறுகிறது. துட்டு வெட்டல, பைல் நகராது. அந்த அளவுக்கு இந்த அதிகாரி ரொம்ப ஸ்டிரிக்ட்... இப்படி நகராத பைல்கள் நிறைய இவரது அலுவலகத்தில் குவிந்து கிடக்கிறது. இந்த அதிகாரிகிட்ட யாராவது எதிர்கேள்வி கேட்டால், மேலிடமே என் கையில என சவால் விடுகிறார்.

ஆட்டம் ரொம்பவே அதிகமாகி விட்டதால், இந்த விவகாரத்துல மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தலையிட்டுள்ளார். தேங்கி கிடக்கிற பைல்களை எல்லாம் விரைவாக அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். ஆனாலும், இந்த பெண் அதிகாரி அசைந்து கொடுக்கல... பூனைக்கு மணி கட்டுவது யார்... என தனியார் பள்ளி உரிமையாளர்கள் புலம்பி தள்ளுறாங்க’’ என்றார் விக்கியானந்தா.

‘‘பயிர் காப்பீட்டு திட்டத்தில் பெரும் பிரச்னையாமே..’’

‘‘ நெல்லை மாவட்டத்தில் 2016 -17ம் ஆண்டில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இன்னும் பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை வந்து சேரவில்லை. இதற்காக ஒவ்வொரு மாதமும் நடக்கும் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் குரல் எழுப்பி, எழுப்பி ஓய்ந்து போய் விட்டனர். 2 கலெக்டர்கள் மாறிச் சென்று 3வது கலெக்டர் வந்த பிறகும் இன்னும் ஒரு மாதத்தில் வழங்கி விடுவோம் என பழைய பல்லவியைத்தான் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பாடி வருகின்றன.பிரீமியம் கட்டி பயிர்களை காப்பீடும் செய்து விட்டு 3 ஆண்டுகளாக இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் இழப்பீட்டுத் தொகை கேட்டு அலுத்துப் போய் விட்டோம். இன்சூரன்ஸ் நிறுவனங்களோ கூட்டத்தில் கலெக்டரையும், மொத்தத்தில் அரசையும் ஏமாற்றி வருகின்றன. எனவே பயிர் காப்பீட்டு இன்சூரன்ஸ் திட்டத்தை ஒட்டு மொத்தமாக அரசின் பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களிடமே ஒப்படைக்கலாமே, எதற்கு ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொரு தனியார் நிறுவனத்திற்கு வழங்க வேண்டும் என நெல்லை மாவட்ட விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர். இது மத்திய, மாநில அரசுகளுக்கு உரைத்தால் சரி என்கின்றனர்’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-02-2020

  23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • theepam2020

  மகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்

 • 22-02-2020

  22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • UkraineCoronaProtest

  கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்!

 • puthu2020

  அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்