SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குடிமக்கள் யார்?

2019-09-21@ 00:10:17

நரேந்திரமோடி தலைமையிலான பாஜ அரசு ஆட்சி பொறுப்பேற்றது முதல் நாளொரு மேனியாக புதுப்புது அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்தி திணிப்பு எனும் தீயை மூட்டிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அது அடங்குவதற்கு முன்பாகவே, பல கட்சிகள் ஆட்சி ஜனநாயகத்துக்கு ஆபத்து என்று பேசியதால் சர்ச்சை எழுந்தது. இதையடுத்து நாடு முழுவதும் குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்படும் என்று கூறியுள்ளார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அசாம் மாநிலத்தில் வங்கதேசத்தினர் பலர் ஊடுருவியதாக வந்த தகவலை தொடர்ந்து அங்கு தயாரிக்கப்பட்ட குடிமக்கள் பதிவேட்டில் 19 லட்சம் பேர் வெளிநாட்டினர் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவர்களில் வெளிநாட்டினர் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாகவும், வங்காள மொழி பேசுபவர்கள், கூர்க்கர்கள் ஆகியோர் பட்டியலில் விடுபட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

எனவே பட்டியலில் அவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அமித்ஷாவை சந்தித்து வலியுறுத்தியுள்ளார். உண்மையான குடிமக்கள் ஆவணங்களுடன் தீர்ப்பாயம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றை நாடலாம் என்று அசாம் மாநில அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்காவிலோ அல்லது வேறு வெளிநாட்டிலோ இந்தியர்கள் குடியேற முடியுமா, அதை அந்நாடு தான் அனுமதிக்குமா என்று கேள்வி எழுப்பிய அமித்ஷா, இந்தியாவில் மட்டும் வெளிநாட்டினர் தங்க எப்படி அனுமதிக்க முடியும். எனவே நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்படும் என்று கூறியுள்ளார். பாஜ தேர்தல் அறிக்கையில் இந்த வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், அதை ஏற்றுக்கொண்டு மக்கள் பாஜவுக்கு வாக்களித்துள்ளதாகவும் அவர் மத்திய அரசின் செயல்பாட்டுக்கு விளக்கம் கொடுத்துள்ளார்.

ஆனால் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்பு என்பது சொந்த நாட்டிலேயே நம் மக்களை அகதிகளாக்கிவிடும் அச்சம் ஏற்பட்டுவிடும் என்ற அச்சம் நிலவுகிறது. இது யாரையோ திருப்திப்படுத்த பாஜ முன்னெடுத்துள்ள முயற்சி என்றும் குற்றம்சாட்டப்படுகிறது. வெளிநாட்டில் இருந்து இங்கு வந்து தங்கியுள்ளவர்களை பாஸ்போர்ட் கொண்டு சோதனை நடத்தி அவர்களை அவர்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்ப வேண்டும். இல்லாவிட்டால் அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடி போன்று அனைத்து மாநிலத்திலும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மத்திய அரசு பரிசீலனை செய்து இத்திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும் அல்லது மாற்று வழியை ஆலோசிக்க வேண்டும் என்பதே அரசியல் கட்சிகள் மட்டுமின்றி சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-10-2019

  20-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 19-10-2019

  19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • boniaredlady

  தனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்!

 • chisa

  தகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா

 • karvachauth_2019

  கணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்