SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஒரு தமிழனாக எனது விருப்பம்; நமது தமிழ் மொழியை மேம்படுத்த வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

2019-09-20@ 17:39:53

சென்னை: நடிகர்கள் கூறும் கருத்துகளை பெரிதாக எடுத்துக்கொள்ள தேவையில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி சென்னை கோடம்பாக்கத்தில்  துப்புரவு தொழிலாளர்களுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஹிந்தி எதிர்ப்பு எனக் கூறிக்கொண்டு மக்களை திசை திருப்பி சிலர் அரசியல் ஆதாயம் தேடி வருவதாக  குற்றம்சாட்டினார். நாடு முழுவதும் தமிழ் மொழி பரவ சீரிய முறையில் வேலைகள் செய்யவேண்டும் என்றார்.

இந்தியை அனைத்து மாநிலங்களிலும் திணிக்கக் கூடாது என சிதம்பரம் கூறுவதில் ஆச்சரியமில்லை. அவர் உள்துறை அமைச்சராக இருந்தபோது காங்கிரஸ் ஹிந்தியை கொண்டுவர முயன்று தோற்று போனது. அதன் வெளிப்பாடே இந்த  வார்த்தைகள் என்று கூறினார். ஒரு தமிழனாக எனது விருப்பம் என்னவெனில், நாம் நமது தமிழ் மொழியை மேம்படுத்த வேண்டும். நம் மொழியை வளர செய்து, அது எல்லா மாநிலங்களிலும் பரவியிருந்தால், தமிழும் ஒரு தேசிய மொழியாக  மாறலாம். அதே நேரத்தில், தகவல் தொடர்புக்கு ஒரு மொழியை நாம் ஏற்றாக வேண்டும். இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

பின்னர், நடிகர்கள் கூறும் கருத்துகளை பெரிதாக எடுத்துக்கொள்ள தேவையில்லை என குறிப்பிட்ட பொன்.ராதாகிருஷ்ணன், அவர்களும் நாட்டின் குடிமக்களே என்றார். இந்தி பிரச்சனைக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம்  அளித்துள்ளார் என்றார். நமது நாட்டின் ஒரு அங்கமாக விளங்கிக் கொண்டிருக்கும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்பட்டு இருந்த நிலையை மாற்றி ஒருங்கிணைந்த ஒரு பகுதியாக காஷ்மீரை பிரதமர் மோடி மாற்றியிருக்கிறார்.  நாடுமுழுவதும் அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை இதன்காரணமாக அகற்றி இருக்கின்றோம்.

வருகின்ற அக்டோபர் 2-ஆம் தேதி முதல் நாடு முழுவதிலும் இருக்கக்கூடிய மக்களை சந்தித்து அவருடைய கொள்கைகளை விவரிக்கும் வகையில் பாத யாத்திரைக்கு திட்டமிடப்பட்டுள்ளது. 15 நாட்கள் தினசரி 10 கிலோ மீட்டர் இந்த  பாதயாத்திரை நடைபெறும் என்றார். மக்கள் நீதி மையத்தின் சார்பில் எத்தனை பேனர்கள் வைக்கப்பட்டது..? திரைப்படத்துறையில் எத்தனை பேனர்கள் வைக்கப்பட்டது..? இறந்தகாலத்தில் நடந்தவற்றைக் கூறி யாரும் ஒருவரை ஒருவர்  மூக்கறுத்து கொள்ள வேண்டாம். எந்தக் கட்சியாக இருந்தாலும் ஒரு கட்டவுட் ஒரு பேனர் கூட வைக்க அனுமதிக்கக் கூடாது. எந்த ஒரு கோவில், மசூதி மற்றும் சர்ச் நிகழ்ச்சியில் பேனர் வைக்க கூடாது என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-10-2019

  20-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 19-10-2019

  19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • boniaredlady

  தனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்!

 • chisa

  தகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா

 • karvachauth_2019

  கணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்