SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மணப்பாறையில் தந்தையுடன் பைக்கில் சென்ற சிறுமியை கட்டாய திருமணம் செய்ய காரில் கடத்திய இந்து முன்னணி பிரமுகர்

2019-09-20@ 00:22:02

* பொதுமக்கள் மடக்கியதால் ஓட்டம்: சிக்கிய 3 பேருக்கு சரமாரி தர்மஅடி

மணப்பாறை: தந்தையுடன் பைக்கில் சென்ற சிறுமியை  காரில் கடத்திய 3 பேரை பொதுமக்கள் மடக்கி தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக திருச்சி மாவட்ட இந்து முன்னணி அமைப்பாளர் உட்பட 2 பேரை  போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி  அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவரும், இவரது  தந்தையும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு வேலை  முடிந்து இரு சக்கர வாகனத்தில் தந்தையும், மகளும் வீடு  திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது, திண்டுக்கல்லிலிருந்து திருச்சி  நோக்கி சென்ற கார் ஒன்று இவர்களை வழிமறித்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு கும்பல் கீழே இறங்கி சிறுமியை மட்டும் தூக்கி காரில் போட்டுக்கொண்டு வேகமாக சென்றனர். அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை,  சத்தமிட்டவாறு காரை பின்தொடர்ந்து ஓடி வந்தார். இதனால் அந்த  கும்பல், அவரையும் காரில் தூக்கிப் போட்டு திருச்சியை  நோக்கி சென்றது. இதற்கிடையே,  இளம்பெண் கடத்தப்பட்ட விபரம் அறிந்த பொதுமக்கள் வத்தமணியாரம்பட்டி,  கல்பட்டி  ஆகிய இடங்களில் காரை மறிக்க முயன்றனர்.

ஆனால் கார்,  திண்டுக்கல் சாலையில் உள்ள புதுக்கோட்டை அருகே வேகமாக சென்றது. அப்போது,  அங்கு திரண்டிருந்த பொதுமக்களை கண்டதும் டிரைவர் திடீர் பிரேக்  போட்டதில் நிலைதடுமாறி கார் கவிழ்ந்தது. உடனே, காரில் இருந்த 2 பேர், அருகில் உள்ள காட்டு வழியாக தப்பி  ஓடினர்.
இதற்குள், காரில் இருந்த 3 பேரையும் பிடித்து பொதுமக்கள் சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர், காரிலிருந்த  தந்தையையும், மகளையும் மீட்டு பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். பிடிபட்டவர்களிடம் பொதுமக்கள் நடத்திய விசாரணையில் கிருபாகரன் (22), சூர்யா (31), தினேஷ் (21)  ஆகியோர் என்பதும், தப்பி ஓடியது இந்து முன்னணி திருச்சி மாவட்ட அமைப்பாளர்  குழந்தைவேலு, செல்லபாண்டியன் என்பதும் தெரியவந்தது.  இதில் குழந்தைவேலுக்கு சிறுமியை திருமணம் செய்து வைக்க கடத்த  முயன்றது தெரியவந்தது. தகவலறிந்த வையம்பட்டி போலீசார்  சம்பவ இடத்திற்கு சென்று 3 பேரையும் மருத்துவமனையில் சேர்த்து விசாரித்து வருகின்றனர். தப்பியோடிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • KateWilliamNorthPak

  அரசு முறை பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து இளவரசர்: பழங்குடியினர் நடன நிகழ்ச்சியை கண்டு உற்சாகம்

 • SouthPhilippinesEQ

  பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 5 பேர் உயிரிழப்பு..கட்டிடங்கள் சேதம்!

 • 17-10-2019

  17-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • KimHorseRide1610

  பயேக்டு பனிமலைகளுக்கு இடையே வெள்ளைக் குதிரையில் பவனி வந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்: புகைப்படத்தொகுப்பு

 • NASASpaceSuit

  நிலவு பயணத்தில் பங்கேற்கும் விண்வெளி வீரர்களுக்கான 2 நவீன விண்வெளி உடைகள்: நாசா அறிமுகம்- புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்