SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாதுகாப்பு முக்கியம்

2019-09-20@ 00:17:16

வரும் 2022ம் ஆண்டுக்குள் நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டிடத்தை கட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக வரும் 2ம் தேதி ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் தரப்பில் இப்போதுள்ள  கட்டிடத்தின் வடிவத்தை மாற்றாமல் அதன் உள்ளே மட்டும் பெரிய அளவில் மாற்றங்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.இப்போதுள்ள கட்டிடம், ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டதாகும். சர் எட்வின் லத்தியன்ஸ் மற்றும் சர் எர்பர்ட் பேக்கர் ஆகியோர் இதை வடிவமைத்து கட்டியுள்ளனர். அவர்கள் கட்டியபோதே, அடுத்த நூற்றாண்டுக்கும் பொருந்தும்  வகையில் கட்டியுள்ளதுதான் அதிசயம். 1921ல் கட்டுமானம் தொடங்கப்பட்டு, 1927ல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. நாடாளுமன்ற கட்டிடத்தின் பின்னணியில் இன்னொரு குறிப்பிடத்தக்க விஷயம், இது ஒரு கோயிலின் மாதிரி என்பது பலருக்கு  தெரியாததாகும். 8ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சவ்சாத் யோகினி கோயிலின் தோற்றத்தில் நாடாளுமன்றம் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.ஆங்கிலேயர்கள் எந்தவொரு விஷயத்தையும் தற்காலத்துக்கு மட்டும் கணக்கிட்டு கட்டுவதில்லை. அடுத்த 50 முதல் 100 ஆண்டுகளுக்கு, அதன் பயன்பாடு எவ்வளவு தூரத்துக்கு உயரும், அப்போது என்னென்ன விஷயங்கள் தேவை என்பதை  கருத்தில் கொண்டே ஒரு கட்டிடமோ, பொருளையோ உருவாக்குகிறார்கள். அவர்கள் கட்டிடங்கள் இன்றளவும் நாடு முழுவதும் பயன்பாட்டில் உள்ளதை நினைத்துப் பார்க்க வேண்டியது இந்த தருணத்தில் முக்கியமானது.

அதை கருத்தில் கொண்டு நாடாளுமன்ற கட்டிடத்துக்கு புதிய கட்டிடம் கட்டும்போது அடுத்த நூறு ஆண்டுகளுக்கு தேவையான வசதிகளை கருத்தில் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால், நாடாளுமன்றத்தை அதிநவீனமாக கட்டுவதும் கூட  சிறந்ததாக இருக்கும் என்பது நிபுணர்களின் கருத்து. அதையும் பரிசீலிக்க வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு.இப்போதுள்ள அச்சுறுத்தல்கள், எதிர்கால அச்சுறுத்தல்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, சுரங்கப்பாதை, விஷ வாயு தாக்குதல் போன்ற அவசரக்காலத்தில் எம்.பி.க்களை பாதுகாக்க தேவைப்படும் அறைகள் போன்றவற்றையும் அமைக்க  வேண்டியது முக்கியம்.நாடாளுமன்றத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது, எம்.பி.க்களை நாடாளுமன்ற மண்டபத்திலேயே அடைத்து வைத்து, கதவுகளை மூடி வீரர்கள் தீரத்துடன் எதிரிகளுடன் போராடினர். அதுபோன்ற சூழ்நிலையில், எம்.பி.க்களை  பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றும் சுரங்கப்பாதை போன்ற அமைப்பு இருந்தால், வீரர்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் எதிரிகளுடன் போராட முடியும். மத்திய அரசின் ஆலோசனையில் இவை அனைத்தும் பரிசீலிக்கப்பட வேண்டும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 15-10-2019

  15-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • MauCylinderBlastUP

  உ.பி.யில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழந்த பரிதாபம்!

 • NorthEastSyriaTurkey

  சிரியாவின் வட கிழக்கு பகுதியில் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வரும் துருக்கி: அப்பாவி பொதுமக்கள் 9 பேர் உயிரிழப்பு!

 • DutchKingIndiaVisit

  அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து மன்னர்...: குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு- புகைப்படங்கள்

 • SaddleridgeFire19

  கலிபோர்னியாவில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் கொழுந்து விட்டு எரியும் தீ..: பல ஏக்கர் நிலம் நாசம், லட்சக்கணக்கானோர் வெளியெற்றம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்