SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

20 கோடி செலவு செய்ததை கேள்வி கேட்ட அரசால் சினிமா ஷூட்டிங் தளமாகிறது பொதுப்பணித்துறை அலுவலகம்: அதிகாரிகளின் நடவடிக்கையால் சர்ச்சை

2019-09-20@ 00:17:15

சென்னை: 20 கோடி செலவு செய்ததை தமிழக அரசு கேள்வி கேட்டதால், பொதுப்பணித்துறை அலுவலகத்தை சினிமா ஷூட்டிங் விட்டு வருவாய் ஈட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் நூற்றாண்டு பழமையான கட்டிடத்தில் பொதுப்பணித்துறை தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தின் பராமரிப்பு பணி பொதுப்பணித்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில்,  இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ₹3 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த நிதியை கொண்டு முறையாக பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படாத நிலையில், கட்டிடங்கள் விரிசல் ஏற்பட்டும், மேற்கூரை பெயர்ந்து விழும் நிலையில்  இருந்தது. இது தொடர்பாக தினகரன் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நூற்றாண்டு பழமையான கட்டிடத்தை புனரமைக்க உத்தரவிட்டார்.

அதன்பேரில் முதலில் 2 கோடி செலவில் இப்பணிகளை முடிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், இந்த கட்டிட புனரமைப்பு மட்டுமின்றி அதிகாரிகளுக்கு சோபா, டிவி வாங்குவது, புதிதாக எல்இடி பொருத்துவது மற்றும் அவர்களது அறையை  அழகுப்படுத்துவது உள்ளிட்ட பல பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக, பராமரிப்பு பணி நிதியில் இருந்து செலவழிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால், ₹20 கோடி ஆக பராமரிப்பு செலவு அதிகரித்தது. இந்த நிலையில் இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் பொதுப்பணித்துறை கட்டுமான பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராஜா மோகனிடம் விளக்கம் கேட்டது. மேலும், அதிக செலவு செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கு மாற்று  ஏற்பாடு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தை சினிமா ஷூட்டிங் விடுவதற்கு பொதுப்பணித்துறை முடிவு செய்துள்ளது. இதன் மூலம் வருவாய் ஈட்ட வழி வகை செய்யப்படும்  என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்நிலையில், நூற்றாண்டு பழமையான கட்டிடமாக உள்ள நிலையில், பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தில் டெண்டர் தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு ரகசிய கோப்புகள் பராமரிக்கப்பட்டு வரும் சூழலில் கட்டிடத்தை  சினிமா ஷூட்டிங் விட முடிவு செய்து இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

எழிலக வளாக கடை வாடகை உயர்வு
எழிலக வளாகத்தில் 100க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. இதில், ஓட்டல், பழக்கடை, ஸ்வீட் கடைகள் உள்ளது. இந்த கடைகளுக்கு வாடகை ₹500 முதல் ₹1,500 வரை வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது 8 ஆயிரம் முதல் 15  ஆயிரம் ஆக வாடகை உயர்த்தப்பட்டுள்ளது. 300 அடி கடைக்கு ₹8 ஆயிரமும், அதற்கு மேல் இருந்தால் அதற்கேற்ப வாடகை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வாடகை ஏப்ரல 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. மேலும், இந்த வாடகையை  முன்தேதியிட்டு தரவும் அவர்கள் வாடகை தாரர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • karvachauth_2019

  கணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்

 • 18-10-2019

  18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • RoboChefOdisha

  உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரோபோக்களை உணவு பரிமாறும் பணியில் ஈடுபடுத்தியுள்ள ஒடிசா உணவகம்: புகைப்படங்கள்

 • AIADMK48

  அதிமுகவின் 48வது ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து ஈபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை

 • KateWilliamNorthPak

  அரசு முறை பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து இளவரசர்: பழங்குடியினர் நடன நிகழ்ச்சியை கண்டு உற்சாகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்