SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப விழா தொடக்கம் இந்திய இளைஞர்களின் திறன் நாட்டில் மாற்றம் கொண்டு வரும்: மத்திய அமைச்சர் பேச்சு

2019-09-20@ 00:17:08

சென்னை : இந்திய இளைஞர்களின் திறன் நாட்டில் மாற்றம் கொண்டு வரும்என்று மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலை வாய்ப்புத்துறை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வார்  தெரிவித்தார். வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் சென்னை வளாகத்தில்  6வது ஆண்டு தொழில் நுட்ப விழா டெக்னோவிட் - 2019 என்ற பெயரில் நேற்று  தொடங்கியது. பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன் தலைமை தாங்கினார்.  துணைத்தலைவர் ஜி.வி.  செல்வம் முன்னிலை வகித்தார். இணை துணைவேந்தர் காஞ்சனா  பாஸ்கரன் வரவேற்றார். டெக்னோவிட் - 2019 என்ற தொழில் நுட்ப விழாவினை  மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை அமைச்சர் சந்தோஷ்குமார்  கங்வார் தொடங்கி வைத்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: இளைஞர்கள் நாட்டில் எதிர்கொள்ள வேண்டிய பிரச்னைகள் மற்றும் சவால்கள்  குறித்து அறிந்து வைத்துள்ளனர். நாட்டில் ஒரு மாற்றத்தை கொண்டு  வருவதற்கும், நாட்டை சரியான திசையில் வழி நடத்துவதற்கும் இந்தியா இளைஞர்களை  பார்த்தபடியே உள்ளது. இன்றைய இளைஞர்களின் திறமைகள் முன்னிலைக்கு கொண்டு  வரப்பட வேண்டும்.

டெக்னோவிட் 2019 போன்ற நிகழ்ச்சிகள் இதுபோன்ற திறமை  மிக்க இளைஞர்களின் திறமையையும், திறனையும் அடையாளம் காண உதவும். சமீபத்தில்  உலகின் தலைசிறந்த 200 பல்கலைக் கழகங்களின் பட்டியல் வெளியானது. அதில்  இந்தியாவில் இருந்து ஒரு பல்கலைக் கழகத்தின் பெயர் கூட இல்லாதது  துரதிருஷ்டவசமானதாகும். வி.ஐ.டி. பல்கலைக் கழகம் போன்று சிறப்பாக  முன்னோக்கி செயல்பட்டால் இந்தியப் பல்கலைக் கழகங்கள் இந்த பட்டியலில்   விரைவில் இடம் பெறும். இவ்வாறு அவர் பேசினார்.
இதைத்தொடர்ந்து  வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன், துணைத் தலைவர் ஜி.வி.செல்வம்  ஆகியோர் உரையாற்றினர். இந்த நிகழ்ச்சியில் டெக்ரோனிகல்ஸ் என்ற பெயரில்  மாநாட்டு மலர் வெளியிடப்பட்டது. இந்த மாநாட்டில் வாலியோ இந்தியா  நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித்துறை இயக்குனர் ஜாஜி விஜயராமன் சிறப்பு விருந்தினராகக் கலந்து  கொண்டு பல்வேறு வடிவமைப்புகளை உருவாக்கிய  மாணவர்களுக்கு 2 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலான ரொக்கப் பரிசுகளை வழங்கி  பேசினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • KimHorseRide1610

  பயேக்டு பனிமலைகளுக்கு இடையே வெள்ளைக் குதிரையில் பவனி வந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்: புகைப்படத்தொகுப்பு

 • NASASpaceSuit

  நிலவு பயணத்தில் பங்கேற்கும் விண்வெளி வீரர்களுக்கான 2 நவீன விண்வெளி உடைகள்: நாசா அறிமுகம்- புகைப்படங்கள்

 • AirQualityDelhi1610

  அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் வேளாண் கழிவுகளால் டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் காற்று மாசு: புகைப்படங்கள்

 • CatalanSpainProtest

  கட்டலான் தலைவர்களின் சிறைத்தண்டனைக்கு எதிர்ப்பு..: ஸ்பெயினின் பல்வேறு இடங்களில் வெடித்தது போராட்டம்!

 • LebanonWildFire1610

  கடுமையான வெப்பம் மற்றும் அனல் காற்றினால் லெபனானில் வரலாறு காணாத காட்டுத்தீ..: சர்வதேச நாடுகள் உதவ கோரிக்கை!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்