SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

12 மணி நேரம்

2019-09-19@ 15:29:55

நன்றி குங்குமம் முத்தாரம்

‘‘ஒரு நாளைக்கு நீங்கள் குறைந்தபட்சம் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்...’’ என்று பெரும் அதிர்வைக் கிளப்பியிருக்கிறார் ஜாக் மா. இன்னொரு பக்கம் அதற்கு இணையத்தில் பெரும் எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது.‘‘நீங்கள் என்ன வேலை வேண்டுமானாலும் செய்திருக்கலாம். ஆனால், முதன் முதலாக நீங்கள் பார்த்த அந்த வேலை தான் உங்களின் வாழ்க்கையில் அதிமுக்கியமானது...’’ என்று சில மாதங்களுக்கு முன் சுவிட்சர்லாந்தில் நடந்த உலகப் பொருளாதார மாநாட்டில் அறிவித்திருந்தார் ஜாக் மா. அவரது வாழ்க்கையைக் கொஞ்சம் பின்னோக்கிப் பார்த்தாலே போதும், அவர் ஏன் வேலை சம்பந்தமாக அடிக்கடி பேசுகிறார் என்பது நமக்குப் புரியும்.

சீனாவில், காங்சூ நகரில் பிறந்த ஜாக் மாவின் இயற்பெயர் மா யுன். தனது ஊருக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டி யாக வேலை செய்ததில் கிடைத்த பணத்தை வைத்து பள்ளிப்படிப்பை முடித்தார். சுற்றுலாப் பயணிகளிடம் ஆங்கிலத்தில் பேசிப் பேசி மொழித் திறனை வளர்த்துக்கொண்ட மாயுன்னிற்கு, ஒரு சுற்றுலாப்பயணி சூட்டிய பெயரே ஜாக் மா! கல்லூரி நுழைவுத் தேர்வில் கடைசி மதிப்பெண், முப்பதுக்கும் மேற்பட்ட நிறுவனங்களின் நேர்காணலில் தோல்வி, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் 10 முறை சேர்க்கை  விண்ணப்பம் நிராகரிப்பு... என இளம் பருவத்தில் ஜாக் மா சந்தித்தது எல்லாமே தோல்வியிலே முடிந்தன.

துவண்டுபோகாத ஜாக்மா, ஒரு பல்கலைக்கழகத்தில் ஆங்கில விரிவுரையாளராக மிகக் குறைந்த சம்பளத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் வேலைக்குச் சேர்ந்தார். இதுதான் அவர் பார்த்த முதல் வேலை. அங்கே  அவரது முதல் மாதச் சம்பளம் 12 அமெரிக்க டாலர்கள். அதாவது 870 ரூபாய்.. இன்று ஜாக் மாவின் சொத்து மதிப்பு சுமார் ரூ.2.79 லட்சம் கோடி! 1999ல் ஒரு சிறிய அறையில் எண்பதுக்கும் மேற்பட்ட நண்பர்களிடம் திரட்டிய 60 ஆயிரம் டாலர் முதலீட்டில், தன்னிடம் பாடம் பயின்ற மாணவர் களைக் கொண்டே ‘அலிபாபா’வை நிறுவினார்.

ஏற்று மதியாளர்கள் நேரடியாகத் தங்களின் பொருட்களை இறக்குமதியாளர்களுக்கு விற்பனை செய்யவும், பணப்பரிமாற்றத்துக்கும் ஏற்ற ஒரு தளத்தை அதில் அறிமுகப்படுத்தினார். இது பெருமளவில் வெற்றி பெறவே, ‘சைனா கூட்ஸ்’ உலகளவில் பிரபலமானது. ஜாக் மாவின் கல்லாவும் நிரம்பியது. இன்று 200 நாடுகளின் ஆன்லைன் வர்த்தகத்தில் ‘அலிபாபா’வின் ராஜ்ஜியம் தான்! சமீபத்தில் சேர்மன் பதவி யிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்த ஜாக் மாவை, 2019 வரை பணியில் இருக்குமாறு நிறுவனப் பங்குதாரர்கள் கேட் டுள்ளனர். இந்நிலையில் ஜாக்மா, தன்னை உருவாக்கிய ஆசிரியப் பணியைத் தொடரப் போவதாக விருப்பம் தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-05-2020

  24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-05-2020

  23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-05-2020

  23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 22-05-2020

  22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • Netaji_Subhash _Chandra_Bose_Airport In Kolkata Got Damaged_In_Amphan_Cyclone

  கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் ஆம்பான் புயலால் சேதமடைந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்