SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அலட்சியத்தின் உச்சம்

2019-09-19@ 00:49:14

மின்வாரிய அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையால் சென்னையில் அடுத்தடுத்து இரண்டு நாட்களில் 2 உயிர்கள் பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போரூர் முகலிவாக்கத்தில் சரிவர புதைக்கப்படாத மின்கம்பி இருந்த இடத்தில் தேங்கிய மழை நீரை  மிதித்த ஆட்டோ டிரைவர் மகனும், மாணவனுமான தீனா பலியானான். அதை ெதாடர்ந்து மின்கம்பம் முறிந்து விழுந்து சிட்லப்பாக்கம் தண்ணீர் கேன் வியாபாரி சேதுராஜ் பலியானார். இன்னும் பருவமழை தொடங்கவில்லை. அதற்குல் இரண்டு உயிர் இழப்புகள். காரணம் என்னவென்று பார்த்தால் மின்வாரிய ஊழியர்களின் மிகப்பெரிய அலட்சியம். சேதம் அடைந்த மின்கம்பங்கள், சரியாக மூடப்படாத மின்வயர்கள் தான் இரண்டு உயிர்கள் பலியாகி உள்ளன.
தமிழகத்தில் 2,796 மின்விநியோகப்பிரிவு அலுவலகங்கள் உள்ளன. இதில் 2.82 லட்சம் டிரான்ஸ்பார்மர்கள் உள்ளன. தற்போது ஆட்கள் பற்றாக்குறையால் ஒவ்வொரு வருடமும் மழைக்காலத்திற்கு முன் செப்டம்பரில் நடக்கும் முன் பருவகால ஆய்வு நடப்பது இல்லை. கடந்த ஜூன் மாதம் 30ம் தேதி நிலவரப்படி தமிழக மின்வாரியத்தில் 47,812 காலிப்பணியிடங்கள் உள்ளன. இன்னும் ஒப்பந்த பணியாளர்கள் 30 ஆயிரம் பேர் நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதில் வடமாநில ஒப்பந்த பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

ஆயிரக்கணக்கான காலிப்பணியிடங்களால் ஒவ்வொரு மின்பொறியாளரும் இரண்டு, மூன்று செக்‌ஷன்களை சேர்த்து பார்க்க வேண்டிய நிர்பந்தம். இதனால் முறைப்படி டிரான்ஸ்பார்மர்கள் பழுது உள்ளிட்ட பணிகளை பார்க்க முடியாத அவலம் மின்வாரியத்தில் ஏற்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் மின்தடை நீடிப்பது வாடிக்கையாகி விட்டது. இந்த அவலத்திற்கிடையே தற்போது பணி அலட்சியம், காலி பணியிடம் அதிகரிப்பின் உச்சமாக கண்காணிப்பு இல்லாமல் போய்விட்டது. பருவமழைக்கு முந்தைய பராமரிப்பு பணிகள் காலங்காலமாக நடப்பவைதான். மின்வயர்கள், மின்கம்பங்கள் தொடங்கி அத்தனையும் பழுதுபார்ப்பது, பழுதானவற்றை மாற்றி அமைப்பது உள்ளிட்ட பணிகள் போர்க்கால அடிப்படையில் மின்பொறியாளர்கள் முன்னிலையில் நடக்கும். ஆனால் இந்த ஆண்டு அதற்கான பணிகள் முடுக்கி விடப்படவில்லை. அதிகாரிகள் முடங்கிப்போனதன் விளைவு சென்னையிலேயே 2 உயிர்கள் பலியாகி இருக்கிறது. தலைநகரிலேயே மின்வாரிய பணிகள் இந்த அவலத்தில் இருக்கிறது என்றால் தமிழகத்தின் பிற மாவட்டங்களில், குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் மக்களின் நிலைமை கடினமாகத்தான் இருக்கிறது.

இதே நிலை தொடர்ந்தால் சிறிய சாரல் மழைக்கு கூட மின்சப்ளை ரத்து செய்யக்கூடிய நிலைதான் மின்வாரியத்தில் ஏற்படும். அந்த அளவுக்கு பொறுப்பற்ற தன்மையாகவும், அலட்சியத்தின் உச்சமாகவும் மின்வாரியத்தின் நிலை உள்ளது. இந்த அரசில் பருவமழைக்கு முந்தைய பணிகளை எந்த துறைகளுமே உரிய நேரத்தில் மேற்கொள்ளவில்லை என்பது தெரிகிறது. மின்வாரியத்தில் அதற்கான ஒரு உதாரணம் தான் சென்னையில் 2 உயிர்கள் பலியாகி இருப்பது. இன்னும் விழித்துக்கொள்ளாவிட்டால் ஆபத்து.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-10-2019

  20-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 19-10-2019

  19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • boniaredlady

  தனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்!

 • chisa

  தகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா

 • karvachauth_2019

  கணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்