SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வரும் செப். 20-ம் தேதி திமுக நடத்தவிருந்த இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு; மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

2019-09-18@ 19:55:43

சென்னை: இந்தி திணிப்புக்கு எதிரான திமுகவின் போராட்டத்தை ஆளுநரின் விளக்கத்தை ஏற்று தற்காலிகமாக ஒத்திவைப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்தி மொழி தினத்தையொட்டி மத்திய உள்துறை மந்திரியும், பா.ஜ.க. தேசிய தலைவருமான அமித் ஷா டிவிட்டரில் வாழ்த்து செய்தி பதிவிட்டிருந்தார். இந்தி நாட்டின் தேசிய மொழியாக இருக்க வேண்டும். இந்தியால் தான் நாட்டை ஒருங்கிணைக்க முடியும். இந்தியை வைத்துதான் வெளிநாடுகளில் இந்தியாவை அடையாளம் காண முடியும் என்று கூறியிருந்தார். அவரது கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அமித்ஷாவின் கருத்திற்கு எதிராக பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசு இந்தியை திணிப்பதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனிடையே இந்தியாவின் அடையாளமாக ஒரு மொழிதான் இருக்க வேண்டும். இந்திதான் அந்த  அடையாளத்தைக் கொடுக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் பேசியிருப்பது, இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்கக் கூடியது. இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஊறுவிளைவிக்கும் இந்தக் கொள்கைகளை முளையிலேயே கிள்ளி  எறிந்திட வேண்டும். அதனால்தான், உயர்நிலை செயல்த்திட்டக் கூட்டத்தில், மத்திய அரசின் இந்தித் திணிப்பையும் ஒரே தேசம் - ஒரே மொழி - ஒரே ரேஷன் ஆகியவற்றை எதிர்த்தும் தமிழ்நாடு தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்துவதெனத்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் வருவாய் மாவட்டத் தலைநகரங்கள் அனைத்திலும் செப்டம்பர் 20ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக அறிவித்திருந்தது.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்றது. பின்னர் சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின் ஆளுநரின் அழைப்பை ஏற்று அவரை சந்தித்து பேசியதாக தெரிவித்தார். எந்த காரணத்தைக் கொண்டும் தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்பட்ட மாட்டாது என்று ஆளுநர் விளக்கினார் என ஆளுநர் பன்வாரிலால் பிரோஹித்தை சந்துத்து பேசிய பின் திமுக தலைவர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்கிற ஆளுநர் இந்தி திணிக்கப்படாது என்று உத்தரவாதம் தந்துள்ளார்.

உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தி திணிப்பு குறித்து பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று ஆளுநர் கூறினார். இந்தியைத் திணித்தாள் அதை திமுக எப்போதும் எதிர்க்கும். இந்தியைத் திணித்தால் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் போராட வேண்டிய நிலை ஏற்படும். இதனிடையே இந்தி திணிப்பை தாம் வலியுறுத்தவில்லை என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-02-2020

  19-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • award20

  விளையாட்டின் ஆஸ்கர் எனப்படும் லாரியஸ் விருதை கைப்பற்றிய சச்சின் டெண்டுல்கர்!!

 • tenish2020

  டென்னிஸ் புயலால் வெள்ளக்காடாகிய இங்கிலாந்து நகரங்கள்...மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

 • america20201

  இந்தியாவிற்கு வருகை புரியும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்ணில் படாமல் இருக்க சுவர் கட்டி மறைக்கப்படும் குஜராத் குடிசைப்பகுதி

 • mumbai fire20

  மும்பையில் ஜிஎஸ்டி பவனில் 8 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்