SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் போனஸ்; இ-சிகரெட்டுக்கு தடை: மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

2019-09-18@ 15:57:08

புதுடெல்லி: ரயில்வே தொழிலார்களுக்கு 78 நாள் ஊதியத்தை போனஸாக வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவால் ரயில்வே தொழிலாளர்கள்  11.52 லட்சம் பேர் பயனடைவார்கள் என அமைச்சரவை அறிவித்துள்ளது. இது குறித்து, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது, ' 11.52 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் தீபாவளி போனஸ்-ஆக வழங்கப்படும் என தெரிவித்தார். கடந்த 6 ஆண்டுகளாகவே ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்தை போனஸாக பாஜக அரசு வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார். மேலும் ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அரசு ரூ.2.024 கோடி ஒதுக்கியுள்ளதாக தகவல் அளித்துள்ளார். அதேபோல, நாடு முழுவதும் ஏ-சிகரெட் எனப்படும் எலக்ட்ரோனிக் சிகிரெட்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இ-சிகரெட்டுக்குத் தடை விதிக்க  அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செயயப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் மத்தியில் எலக்ட்ரானிக் சிகரெட்டுகள் புழக்கம் 77% அதிகரித்துள்ளதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார். உடல்நலத்துக்கு கேடு விளைவிப்பதால் இ-சிகரெட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார். இதையடுத்து, எலக்ட்ரோனிக் சிகரெட்டில் உள்ள 400 வகையான பிராண்டுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, இ-சிகரெட்டுகளை விற்பனை செய்தாலோ, பயன்படுத்தினாலோ சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல இ-சிகரெட் உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் இ-சிகரெட்கள் தடைக்கும், ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்கும் திட்டத்திற்கும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக மத்திய அமைச்கர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்