SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இதன் விலை ரூ.28 லட்சம்!

2019-09-18@ 14:34:01

நன்றி குங்குமம்

‘‘பருவநிலை மாற்றம், காற்று மாசுபாடு குறித்த விழிப்புணர்வு மனிதனின் வாழ்க்கையில் பல்வேறு விதமான மாற்றங்களைக் கொண்டு வரும்...’’ என்று அடித்துச் சொல்கிறார்கள் விஞ்ஞானிகள். ‘‘குறிப்பாக வாகனப் பயன்பாட்டில் பெரும் பாய்ச்சல் நிகழும்...’’ என்கிறார்கள். ‘‘இன்னும் சிலவருடங்களில் பெட்ரோல், டீசல் வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டு எல்லாமே எலெக்ட்ரிக்கல் ஆகிவிடும்...’’ என்று பீதியை வேறு கிளப்புகிறார்கள். அப்படி எலெக்ட்ரிக்கல் ஆகும்போது இப்போதிருக்கும் வாகனத்தின் விலையை விட பல மடங்கு அதிகமாக இருக்கும். இந்நிலையில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தீவிர பரிசோதனை முயற்சிகள் வளர்ந்த நாடுகளில் தினந்தோறும் அரங்கேறி வருகின்றன. அப்படியான ஒரு பரிசோதனை முயற்சிதான் இது. ஜெர்மனியின் புகழ்பெற்ற எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனம் ‘நோவுஸ்’.

சில மாதங்களுக்கு முன்பு லாஸ் வேகாஸில் நடந்த கன்ஸ்யூமர் எலெக்ட்ரானிக்ஸ் ஷோ 2019ல் புதுவிதமான எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தி பலரை வாய்பிளக்க வைத்தது. சைக்கிளுக்கும் மொபெட்டுக்கும் இடையிலான அதன் தோற்றமே பலரை ஈர்த்தது. மெலிதான அதன் சக்கரம், டயர், நம்பர் ப்ளேட் கண்களைக் குளிர்வித்தன. முக்கியமாக இந்த மோட்டார் சைக்கிளில் லைட் இல்லை. கார்பன் ஃபைபரால் உருவான முதல் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் இதுவே. இதன் எடை வெறும் 38.5 கிலோ. கைகளாலேயே இதைத் தூக்கி விட முடியும். 14.4 கிலோவாட் லித்தியம் அயன் பேட்டரி பொருத்தப்பட்டிருப்பதால் சார்ஜ் போட்ட ஒருமணி நேரத்திலேயே 80 சதவீதம் சார்ஜாகிவிடுகிறது. ஒருமுறை பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்துவிட்டால் 98 கி.மீ வரைக்கும் ஜாலியாக பயணிக்கலாம். அதிகபட்சம் மணிக்கு 96 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த மோட்டார் சைக்கிள் பாய்கிறது. விலை ரூ.28 லட்சம் என்பதுதான் கொஞ்சம் பயமுறுத்துகிறது.

தொகுப்பு: த.சக்திவேல்


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • deepam 9 fest

  திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா 9-வது நாள் உற்சவத்தில் மாடவீதிகளில் சாமி உலா.

 • 10-12-2019

  10-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • hongkiong_1211

  அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் 6 மாத கால நிறைவை முன்னிட்டு ஹாங்காங்கில் பிரம்மாண்ட பேரணி : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

 • northesat_masothaa1

  குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டங்களால் போர்க்களமாகி உள்ள வடகிழக்கு மாநிலங்கள்

 • dragon_shapes_chinaa1

  40 மீட்டர் நீள டிராகன், பாண்டா.. சீன புத்தாண்டை முன்னிட்டு எஸ்டோனிய தலைநகரை அலங்கரித்த ஒளிரும் உருவங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்