SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புல் பாலம்!

2019-09-18@ 14:21:42

நன்றி குங்குமம்

படத்தில் நீங்கள் காண்பது 600 ஆண்டுகள் பழமையான கயிற்றுப் பாலத்தை. கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடிப்பதற்கு முன்பான ப்ரீ-அமெரிக்க நிலப்பகுதிகளை ஆட்சி செய்து வந்த இன்கா பேரரசின் அரிய கண்டுபிடிப்பு இது. தவிர, இன்கா பேரரசின் சாலைப் போக்குவரத்துத் துறையின் முக்கிய அம்சமாக இருந்ததும் இந்தக் கயிற்றுப் பாலமே. மெக்சிகோ, வெனிசுலா, பொலிவியா காடுகளில் விளையும் புற்களைக் கொண்டு கயிறை நெய்திருப்பதால் புல் பாலம் என்றும் இதை அழைக்கின்றனர். பெரு நாட்டில் அபுரிமேக் நதிக்கு குறுக்கே அமைந்துள்ள இக்கயிற்றுப் பாலத்தை ஒவ்வொரு வருடமும் புதுப்பிக்கிறார்கள். பெண்கள் புற்களைக் கொண்டு கயிறை நெய்து தருவார்கள். ஆண்கள் பாலம் கட்டுவார்கள். பழைய பாலத்தை அப்படியே நதியில் போட்டுவிடுவார்கள். மூன்றே நாட்களில் பாலம் கட்டும் வேலை முடிந்துவிடும். இப்போதும் இந்தப் பாலத்தில் மக்கள் நடந்து செல்கிறார்கள். பாலம் கட்டும் பணியில் எந்தவிதமான இயந்திரமும் பயன்படுத்தாததுதான் ஹைலைட்.

தொகுப்பு: த.சக்திவேல்


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-10-2019

    15-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • MauCylinderBlastUP

    உ.பி.யில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • NorthEastSyriaTurkey

    சிரியாவின் வட கிழக்கு பகுதியில் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வரும் துருக்கி: அப்பாவி பொதுமக்கள் 9 பேர் உயிரிழப்பு!

  • DutchKingIndiaVisit

    அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து மன்னர்...: குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு- புகைப்படங்கள்

  • SaddleridgeFire19

    கலிபோர்னியாவில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் கொழுந்து விட்டு எரியும் தீ..: பல ஏக்கர் நிலம் நாசம், லட்சக்கணக்கானோர் வெளியெற்றம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்