SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அடுத்தடுத்த பறிப்பு

2019-09-18@ 00:33:11

ஒவ்வொரு ஆண்டும் காலாண்டு தேர்வுகள் முடிந்ததும் பள்ளிகளுக்கு ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை விடுமுறை அறிவிப்பது வாடிக்கை. தமிழகத்தில் இந்த நடைமுறைக்கு கடந்த ஆண்டுவரை எந்த சிக்கலும் இல்லை. ஆனாலும் பள்ளி விடுமுறை அறிவிக்கும் அதிகாரத்தைக் கூட தன் கையிலெடுக்க மத்திய அரசு முனைந்திருப்பது இந்தாண்டு புதிய சர்ச்சையை உருவாக்கிவிட்டது. மோடி 2..0 ஆட்சியில் ஒரே நாடு  ஒரே தேர்தல் என்ற கோஷம் உரக்க ஒலித்தது. இதை தொடர்ந்து ஒரே ரேஷன் கார்டு, ஒரே வரி, ஒரே கல்வி, ஒரே மொழி- இந்தி என்று அடுத்தடுத்து ‘ஒரே’ கோஷங்கள் அணிவகுத்து வருகின்றன. இந்த ‘ஒரே’ கோஷங்கள் மூலம் பல பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை திருப்ப அரசு முயற்சிப்பதாக புகார்கள் எழுந்தபோதும் அதை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை.

இந்தநிலையில், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் இந்த ஆண்டு காலாண்டு தேர்வு விடுமுறை உண்டா? இல்லையா? என்ற குழப்பத்துக்கு இந்த ஒரே நாடு ஒரே கல்வி கோஷம் காரணமாக அமைந்துள்ளது. இந்த ஆண்டு மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை எப்படி கொண்டாடுவது என்று மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பிய விழா அட்டவணை தான் குழப்பத்தின் தொடக்கப்புள்ளி. இதை மேற்கோள்காட்டி மாநில ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட இயக்குநர் அனுப்பிய சுற்றறிக்கை, செப்டம்பர் 23ம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரை காந்தியின் 150வது பிறந்தநாளை பள்ளிகளில் கொண்டாட அறிவுறுத்தியுள்ளது. வரும் 24ம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதிவரை காலாண்டு தேர்வு விடுமுறை என்ற மகிழ்ச்சியில் இருந்த மாணவர்களுக்கு ஷாக் கொடுத்தது இந்த அறிவிப்பு.

பள்ளிகளில் எப்போது லீவு விடவேண்டும் என்பதை கூட மத்திய அரசுதான் முடிவு செய்யும், அந்த அதிகாரம் கூட மாநிலங்களிடம் இருந்து பறிக்கப்படும் நிலை. ஒரு காலத்தில் மாநில சுயாட்சிக்கு குரல் கொடுத்த முன்னோடி மாநிலம் தமிழகத்துக்கா இந்த நிலை? தமிழக பள்ளிகளுக்கு விடுமுறையை கூட மத்திய அரசே முடிவு செய்வதா? இந்த உரிமை கூட தமிழக அரசுக்கு இல்லையா? அதிகாரத்தை ஒட்டுமொத்தமாக ஒரே இடத்தில் குவித்து வைப்பது ஜனநாயகத்துக்கு ஆபத்து. இது நாடு சர்வாதிகாரத்தை நோக்கி நகர்வதையே காட்டும். எனவே, அதை விடுத்து அதிகாரத்தை பரவலாக்கி ஜனநாயகத்தை தழைக்க செய்ய வேண்டும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 15-10-2019

  15-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • MauCylinderBlastUP

  உ.பி.யில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழந்த பரிதாபம்!

 • NorthEastSyriaTurkey

  சிரியாவின் வட கிழக்கு பகுதியில் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வரும் துருக்கி: அப்பாவி பொதுமக்கள் 9 பேர் உயிரிழப்பு!

 • DutchKingIndiaVisit

  அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து மன்னர்...: குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு- புகைப்படங்கள்

 • SaddleridgeFire19

  கலிபோர்னியாவில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் கொழுந்து விட்டு எரியும் தீ..: பல ஏக்கர் நிலம் நாசம், லட்சக்கணக்கானோர் வெளியெற்றம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்