SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மொகாலியில் 2வது டி20 போட்டியில் இன்று தென் ஆப்ரிக்காவுடன் இந்தியா மோதல்: இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது

2019-09-18@ 00:18:20

மொகாலி: இந்தியா - தென் ஆப்ரிக்கா மோதும் 2வது டி20 போட்டி மொகாலி, பஞ்சாப் கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது.இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்ரிக்க அணி தலா 3 போட்டிகள் கொண்ட டி20, டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடுகிறது. தர்மசாலா, இமாச்சல் கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் கடந்த 15ம் தேதி  நடைபெறுவதாக இருந்த முதல் டி20 போட்டி, கனமழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டது.
இந்த நிலையில், 2வது டி20 போட்டி மொகாலியில் இன்று நடைபெறுகிறது. இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர்/ பேட்ஸ்மேன் ரிஷப் பன்ட் கணிசமாக ரன் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அவர் தேவையில்லாத ஷாட் அடித்து  தனது விக்கெட்டை தானம் செய்வது சில சமயம் அணியை நெருக்கடிக்கு ஆளாக்கிவிடுவதாக தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள ஐசிசி உலக கோப்பை டி20 தொடருக்கு தயாராக வேண்டி உள்ளதால், ரிஷப் பன்ட் மட்டுமின்றி மற்ற இளம் வீரர்களும் திறமையை நிரூபிக்க வேண்டிய அவசியத்தில் உள்ளனர்.குவின்டான் டி காக் தலைமையிலான தென் ஆப்ரிக்க அணியிலும் இளம் வீரர்கள் அதிக அளவில் இடம் பிடித்துள்ளனர். டி காக், மில்லர், ரபாடா ஆகியோரின் அனுபவம் அந்த அணிக்கு கை கொடுக்கும் என எதிர்பார்க்கலாம். இரு அணிகளுமே வெற்றி முனைப்புடன் வரிந்துகட்டுவதால் ஆட்டம் மிகவும் சுவாரசியமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.இந்தியா: விராத் கோஹ்லி (கேப்டன்), ரோகித் ஷர்மா, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர், மணிஷ் பாண்டே, ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குருணல் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், ராகுல்  சாஹர், கலீல் அகமது, தீபக் சாஹர், நவ்தீப் சாய்னி.தென் ஆப்ரிக்கா: குவின்டான் டி காக் (கேப்டன்), ராஸி வான் டெர் டஸன், தெம்பா பவுமா, ஜூனியர் டாலா, பியார்ன் பார்ச்சுவன், பியூரன் ஹெண்ட்ரிக்ஸ், ரீஸா ஹெண்ட்ரிக்ஸ், டேவிட் மில்லர், அன்ரிச் நார்ட்ஜே, அன்டில் பெலுக்வயோ,  டுவைன் பிரிடோரியஸ், காகிசோ ரபாடா, டாப்ரைஸ் ஷம்ஸி, ஜார்ஜ் லிண்டே.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 15-10-2019

  15-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • MauCylinderBlastUP

  உ.பி.யில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழந்த பரிதாபம்!

 • NorthEastSyriaTurkey

  சிரியாவின் வட கிழக்கு பகுதியில் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வரும் துருக்கி: அப்பாவி பொதுமக்கள் 9 பேர் உயிரிழப்பு!

 • DutchKingIndiaVisit

  அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து மன்னர்...: குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு- புகைப்படங்கள்

 • SaddleridgeFire19

  கலிபோர்னியாவில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் கொழுந்து விட்டு எரியும் தீ..: பல ஏக்கர் நிலம் நாசம், லட்சக்கணக்கானோர் வெளியெற்றம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்