SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிலிப்பைன்ஸ் நாட்டில் பள்ளத்தாக்கில் லாரி கவிழ்ந்த விபத்து: குழந்தைகள் உள்பட 20 பேர் உயிரிழப்பு

2019-09-17@ 18:41:44

மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில் பள்ளத்தாக்கில் லாரி கவிழ்ந்த விபத்தில் குழந்தைகள் உள்பட 20 பேர் பலியாகினர். பிலிப்பைன்ஸ் நாட்டின் திரிபோலி பகுதியில் கடலில் குளிக்க சென்ற ஒரு கும்பல் லாரி ஒன்றில் வீடு திரும்பிக் கொண்டிருந்தது. அந்த லாரியில் குழந்தைகள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து அருகிலுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்தது. இந்த விபத்தில் அதில் பயணம் செய்த குழந்தைகள் உள்பட் 20 பேர் பரிதாபமாக பலியாகினர்.

தகவலறிந்து அங்கு வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் சாலைகள் சரியாக பராமரிக்கப்படாததால் இதுபோன்ற சாலை விபத்துகள் அடிக்கடி ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • siva5

    1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு!

  • death5

    கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்!!!

  • coronaa5

    புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்

  • locust4

    ராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு!: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை!!!

  • ingland4

    இங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்