SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அக்.15ல் அறிமுகமாகிறது பிக்சல் 4 மற்றும் பிக்சல் 4 XL போன்கள்: கூகுள் நிறுவனம் அறிவிப்பு

2019-09-17@ 14:48:59

கடந்த ஆண்டு கூகுள் நிறுவனம் பிக்சல் 3, பிக்சல் 3 XL, பிக்சல் ஸ்லேட், புதிய க்ரோம்காஸ்ட், நெஸ்ட் ஹப் உள்ளிட்ட சாதனங்களை அறிமுகம் செய்தது. இதையடுத்து, கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 4 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பற்றிய பெருமளவு விவரங்கள் இணையத்தில் அடிக்கடி வெளியாகி இருக்கின்றன. இவற்றின் உண்மைத் தன்மை பற்றி எவ்வித தகவலும் இல்லை.

இந்நிலையில், கூகுள் நிறுவனம் தனது புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கான அறிமுக விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி அக்டோபர் 15ம் தேதி நடைபெற இருக்கும் கூகுள் நிகழ்வில் அந்நிறுவனம் பிக்சல் 4, பிக்சல் 4 XL, பிக்சல்புக் 2, புதிய கூகுள் ஹோம் ஸ்பீக்கர்கள், நெஸ்ட் மினி மற்றும் பல்வேறு புதிய சாதனங்களை அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது.

பிக்சல் 4 XL ஸ்மார்ட்போனில் 6.23 இன்ச் 3040x1440 பிக்சல் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், 12.2 எம்.பி. சோனி IMX363 + 16 எம்.பி. IMX481 டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்படுகிறது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் பிக்சல் 4 XL ஸ்மார்ட்போனில் நாட்ச் இல்லாத 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என தெரிகிறது. செட்டிங்ஸ் செயலியில் இருந்து ஸ்மூத் டிஸ்ப்ளே ஆப்ஷனை தேர்வு செய்யலாம். இது 60 முதல் 90 ஹெர்ட்ஸ்களிடையே செட்டிங்கை தானாக மாற்றிக் கொள்ளும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-10-2019

    20-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 19-10-2019

    19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • boniaredlady

    தனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்!

  • chisa

    தகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா

  • karvachauth_2019

    கணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்