SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முதியோர் உதவித்தொகை 2 ஆண்டாக இல்லை: மனு அளித்து கதறல்

2019-09-17@ 12:46:13

திண்டுக்கல்: முதியோர் உதவித்தொகை 2 ஆண்டாக வழங்கவில்லையென கூறி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் வெள்ளோடு மூதாட்டிகள் மனு அளித்தனர். திண்டுக்கல் அடுத்த ஏ.வெள்ளோடு, செபஸ்தியார் தெருவை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட மூதாட்டிகள் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தனர். அந்த மனுவில், ‘எங்களுக்கு வழங்கப்பட்டு வந்த முதியோர் உதவித்தொகையை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திடீரென நிறுத்தி விட்டனர்.

இதுகுறித்து பலமுறை மனுக்கள் அளித்து விட்டோம். ஆனால் இதுவரை எங்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கவில்லை. இந்த பணத்தை வைத்துதான் எங்களுக்கு உணவு, மருத்துவ செலவுகளை பார்க்க வேண்டியுள்ளது. எனவே முதியோர் உதவித்தொகை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்ற கலெக்டர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bday_day11

    ஏவுகணை நாயகனின் 88வது பிறந்த தினம் இன்று!.. : கனவுகளை விதைத்த அப்துல் கலாமின் அறிய புகைப்படங்கள்

  • 15-10-2019

    15-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • MauCylinderBlastUP

    உ.பி.யில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • NorthEastSyriaTurkey

    சிரியாவின் வட கிழக்கு பகுதியில் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வரும் துருக்கி: அப்பாவி பொதுமக்கள் 9 பேர் உயிரிழப்பு!

  • DutchKingIndiaVisit

    அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து மன்னர்...: குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு- புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்