SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தந்தை பெரியாரின் 141-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் முதல்வர் பழனிசாமி

2019-09-17@ 10:55:37

சென்னை: தந்தை பெரியாரின் 141-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். தந்தை பெரியாரின் 141-வது பிறந்த நாளை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் அவருடைய திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழக அரசு சார்பில் பல்வேறு இடங்களில் இருக்கக்கூடிய பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தும், அவர் திருவுருவ படத்துக்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தப்படுகிறது.

தற்போது சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலையின் கீழ் வைக்கப்பட்டுள்ள பெரியாரின் திருவுருவ படத்திற்கு தமிழக முதல்வர் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மேலும் அமைச்சர்கள் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, அதுபோல எம்.பி.சம்பத், உள்ளிட்டஅனைவரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பெரியாரின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதேபோல பல்வேறு இடங்களில் அரசு சார்பில் நடைபெற்று வரும் நிகழச்சியில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், உள்ளூரில் இருக்கக்கூடிய எம்எல்ஏக்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-10-2019

    20-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 19-10-2019

    19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • boniaredlady

    தனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்!

  • chisa

    தகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா

  • karvachauth_2019

    கணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்