SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தந்தை பெரியாரின் 141-வது பிறந்தநாளை முன்னிட்டு பெரியார் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை

2019-09-17@ 10:41:29

சென்னை: தந்தை பெரியாரின் 141-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை சிம்சன் பெரியார் சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது உருவப்படத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மானமும் அறிவும் மனிதருக்கு அழகு என்று போதித்து, தமிழ்ச் சமூகத்தின் உயர்வுக்காக தமது வாழ்நாள் இறுதி வரை அயராது உழைத்தவர் தந்தை பெரியார் என ஸ்டாலின் தெரிவித்தார். அதனால் தான், 'தொண்டு செய்து பழுத்த பழம், தூய தாடி மார்பில் விழும், மனக்குகையில் சிறுத்தையில் எழும், மண்டைச் சுரப்பை உலகு தொழும்' என தந்தை பெரியாருக்கு புகழாரம் சூட்டினார் பாவேந்தர் என தெரிவித்தார். பகுத்தறிவு பகலவன் என்று தமிழர்களால் போற்றப்படும் தந்தை பெரியாரின் 141-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.

இதை முன்னிட்டு சென்னை அண்ணாசாலை சிம்சன் சிக்னல் அருகே அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்ட பெரியார் உருவப்படத்திற்கு அவர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். திமுக நிர்வாகிகள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்களும் பெரியார் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். தயாநிதி மாறன், ஆர்.எஸ்.பாரதி, மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 29-05-2020

    29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 28-05-2020

    28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-05-2020

    26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-05-2020

    25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-05-2020

    24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்