SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஹெல்மெட்போடாததால் அபராதம் விதிப்பார்களே என்று பயந்து மாரடைப்பால் இறந்தநபர் குறித்துசொல்கிறார்: wiki யானந்தா

2019-09-17@ 00:59:20

‘‘கிப்ட்காரர் திட்டமிட்டபடியே பழிவாங்கிட்டாரு போல...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘ம்.. தன்னை பற்றி சிறைபறவையிடம் போட்டு கொடுத்து ஜெயில் பக்கமே வர விடாமல் தடுத்தது... சிறை பறவையின் பணத்தை சுருட்டியது... கிப்டின் கிச்சன் கேபினட் செய்த தில்லாலங்கடி வேலைகள் அனைத்தும் ‘லைவ்’வாக அப்படியே சிறை பறவைக்கு சென்றதாம். அவர் கடும் அப்செட்டில் இருக்கிறாராம். இதனால் தன் சொத்துகளுக்கு தான் சிறையில் இருந்து வெளியே வரும் வரை ஒருவரை கார்டியனாக போடவும் அவற்றை பாதுகாக்கவும் முடிவு செய்துள்ளாராம். அதனால அதற்கான பணிகள் சிறை துறை வளாகத்திலேயே நடக்குமாம். இதை உறுதிபடுத்தும் வகையில் சிறைபறவையின் தம்பியும் கிப்ட்டை கடுமையாக தாக்கி பேசியதோடு, சிறை பறவை விடுதலையாவதை தடுக்கும் முயற்சியில் கிப்ட் ஈடுபட்டு இருப்பதாக பெரிய குண்டை போட்டுள்ளார்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ஹெல்மெட் சோதனைக்கு பயந்து இறந்துட்டாங்களா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘திருச்சி மணப்பாறையில் ஹெல்மெட், சீட் பெல்ட் அணியாதவர்கள் மீது பல்வேறு வழக்குகளை பதிந்து வருகின்றனர். இந்நிலையில் மணப்பாறை அருகே போக்குவரத்து ஆர்ஐ தலைமையில் வாகன சோதனை நடந்தது. அப்போது அவ்வழியே பைக்கில் ஹெல்மெட் அணியாமல் வந்த ஒருவர், போலீசாரை பார்த்ததும் பைக்கை ஓரமாக நிறுத்தி என்ன செய்வதென ேயாசித்து கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட மன அழுத்ததில் திடீரென மயங்கி விழுந்தார். அவ்வழியே சென்றவர்கள் அவரை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதை கேள்விப்பட்ட போலீசார் அதிர்ச்சியடைந்தனர். அதில் சிலர் அங்கிருந்து எஸ்கேப் ஆனார்கள். இந்த பிரச்னை வாட்ஸ்அப்பில் வைரலாக பரவுவதற்கு முன் என்ன செய்யலாம் என யோசித்த போலீசார், இறந்தவர் வீட்டுக்கு அதிரடியாக சென்றனர். அவரது குடும்பத்தினரிடம் சமரச பேச்சுவார்ததை நடத்தியும் பெரிய அமவுண்டை கொடுத்தும் பிரச்னையை பெரியதாக வளரவிடாமல் தடுத்து முற்றுப்புள்ளி வைத்தனர்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தமிழகத்தின் உயர் பதவியில் உள்ள காக்கிகளே காட்பாடியில் விழுந்து கிடக்கிறதாமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘வேலூரில் இந்தியாவின் தலைநகரை அடைமொழியாக கொண்டவர் காவல்துறையையே கலக்கி வருகிறார். உயர் அதிகாரிகளும் ஆந்திர எல்லையில் உள்ள அவரது வீட்டில்தான் காத்து கிடக்கின்றனர். இதில் குறிப்பாக ஐபிஎஸ் அதிகாரிகள்தான் அதிகம். யாருக்கு எந்த இடத்தில் பணியிட மாறுதல் வேண்டும். பதவி உயர்வு வேண்டும் என்பதை சமீபமாக இவர்தான் முடிவு செய்து வருகிறாராம்.
இவரை பார்க்க வரும் ஐபிஎஸ் அதிகாரிகள், எத்தனை மணி நேரமானாலும் தவம் இருப்பதற்கும் தயங்குவதில்லையாம். இவரை கண்காணிப்பது தங்களது உயர் அதிகாரிகளை கண்காணிப்பதற்கு சமம் என்று உளவுத்துறையும் மவுனமாகிவிட்டது. ஆனாலும் என்னதான் நடக்குது என்பது தெரியாமல்
 உளவுத்துறை அதிகாரிகளும் கலக்கத்தில் உள்ளனர்.
சமீபத்தில் ஐஜி உட்பட ஒட்டுமொத்த காவல்துறை உயரதிகாரிகளும் வேலூரில் அந்த நபரை பார்க்க குவிந்தனர். இச்சம்பவம் வேலூர் மாவட்ட போலீசாரை மேலும் கிறுகிறுக்க செய்து விட்டது. இதனால் தலைநகரின் பெயரை அடைமொழியாக கொண்டவரை கண்காணித்துக் கொண்டிருந்த சில உளவுத் துறையினரும் நமக்கெதற்கு வம்பு என ஓட்டம் பிடித்தனர்.
இதற்கிடையே சில தினங்களுக்கு முன்பு அடைமொழி பெயரை கொண்டவரின் உறவினர் உடல்நிலை பாதித்து வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தகவல் அறிந்ததும் தமிழக காவல்துறையை வழிநடத்தும் உயர் அதிகாரியே நேரில் வந்து பார்த்து நலம் விசாரித்து சென்றாராம். இது தான் தற்போது வேலூரில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்தியாவின் தலைநகரை மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவையே நான்தான் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறேன் என்று வெளிப்படையாகவே அவர் கூறி வருகிறாராம். இவருக்கு மிகப்பெரிய கடத்தல் சம்பவங்களில் தொடர்பிருக்கலாம் என்பதே உளவுத்துறையின் கணிப்பு. இவரிடம் இந்தியாவில் முக்கியமான தலைமறைவு குற்றவாளிகள் குறித்த விவரங்கள் இருப்பதாகவும், அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் இருக்க கணிசமான தொகை வீடு தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் காவல்துறையை கட்டுப்பாட்டில் வைத்துள்ள அவரை பற்றி உயர் அதிகாரிகளிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் போலீசார் சலாம் போட தொடங்கிவிட்டனர். மேலும் கடத்தல் வழக்குகளில் மேற்கொண்டு விசாரணை நடத்த விடாமல் போலீசாருக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறாராம். இவருக்கு சிபிஐ மற்றும் மத்திய உளவுத் துறையிலும் செல்வாக்கு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வருமான வரி அதிகாரிகளும் ரெய்டு நடத்த திட்டமிட்டு, தோல்வியை சந்தித்துள்ளார்கள் என்று பரபரப்பாக பேசப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பதை உளவுத்துறை தான் கண்டுபிடிக்க வேண்டும்...’’ என்றார் விக்கியானந்தா.     


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-02-2020

  23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • theepam2020

  மகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்

 • 22-02-2020

  22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • UkraineCoronaProtest

  கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்!

 • puthu2020

  அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்