SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

2 லாரிகள் இருப்பதாக போலி ஆவணம் மூலம் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ10 லட்சம் கடன் பெற்ற நபர் கைது

2019-09-17@ 00:50:58

சென்னை:  சென்னை மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் தனியார் பைனான்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் எம்எம்டிஏ மாத்தூர்  4வது குறுக்கு தெருவை சேர்ந்த மணிகண்டன் (37) என்பவர் தனது பெயரில் 2 லாரிகள் உள்ளதாக கூறி அதற்கான ஆவணங்களை கொடுத்து ரூ.10 லட்சம் கடன் பெற்றுள்ளார். வாங்கிய கடனுக்கு 2 மாதங்கள் முறையாக தவணையும் கட்டினார். அதன்பிறகு அவர் கடனை திரும்ப கொடுக்கவில்லை. வாங்கிய கடனுக்கு பணம் கட்டாததால் பைனான்ஸ் நிறுவன கிளை மேலாளர் வெங்கட சிவசுப்பிரமணியம் (47) என்பவர் 2 லாரிகளையும் பறிமுதல் செய்ய சென்றார். அப்போது மணிகண்டன் பெயரில் எந்த லாரியும் இல்லாதது தெரியவந்தது. தனது பெயரில் 2 லாரிகள் உள்ளது போல் போலி ஆவணம் தயாரித்து அந்த ஆவணத்தை பைனான்ஸ் நிறுவனத்தில் கொடுத்து ரூ.10 லட்சம் பெற்றது தெரியவந்தது. இதைதொடர்ந்து மோசடி செய்த மணிகண்டன் மீது பைனான்ஸ் நிறுவன மேலாளர் வெங்கட சிவசுப்பிரமணியன் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் மோசடி பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.

* மதுரை மாவட்டம், மகாத்மா காந்தி நகரைச் சேர்ந்தவர் பாண்டியராஜன் (50). இவரது மகன் ஆனந்த் (23). இவர் நேற்று முன்தினம் இரவு குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயற்சித்தபோது அவ்வழியாக வந்த ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்த தாம்பரம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் குறித்து அவரது தந்தை பாண்டியராஜனுக்கு தகவல் கொடுக்க மதுரைக்கு தொடர்பு கொண்டனர். அப்போது அவர் சென்னையில் இருப்பது தெரியவந்தது. பின்னர் அவருக்கு செல்போன் மூலம் ஆனந்த் இறந்த தகவலை தாம்பரம் ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நேற்று அதிகாலை பாண்டியராஜன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனை அருகே ஜிஎஸ்டி சாலையில் கார் மோதி படுகாயமடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சென்னை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

* சென்னை கொருக்குப்பேட்டை ரயில் நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் மதுபான கடை அருகே 4 பேர் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வழிப்பறியில் ஈடுபட்டு வருவதாக ஆர்.கே.நகர் காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர். அந்த தகவலின்பேரில் ஆர்.கே.நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொருக்குப்பேட்டை ரயில்வே கேட் அருகே சுற்றித்திரிந்த நான்கு ரவுடிகளை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த பாஸ்கர் மற்றும் அவரது நண்பர்கள் பரத், பிரகாஷ், ராபர்ட் என தெரியவந்தது. பின்னர் பாஸ்கரிடம் நடத்திய விசாரணையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில் 3 பேரை கொலை செய்து வழக்கில் சிறைக்கு சென்று பின்னர் சென்னை கொருக்குப்பேட்டை பாரதி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசிக்கும் தனது மாமியாரை பார்க்க வந்ததாகவும், அப்போது அந்த பகுதியில் உள்ள மதுபான கடையில் நண்பர்களுடன் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டதாகவும் போலீசிடம் தெரிவித்தார். தொடர்ந்து பாஸ்கர் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

*  வேளச்சேரி காவல் நிலைய போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். வேளச்சேரி 100 அடி பைபாஸ் சாலையில் சோதனை நடத்திக்கொண்டிருந்தனர்.  அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து  அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர்.  அவர் பையில் 2 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.   இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.  பிடிபட்டவர், கே.கே. நகரைச் சேர்ந்த கணேசன் (35) என்பதும் இவர் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

*  சென்னை வாலாஜா சாலையில் ேநற்று முன்தினம் மாலை மினி தண்ணீர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.  கலைவாணர் அரங்கில் இருந்து உழைப்பாளர் சிலையை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக தண்ணீர் லாரி ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோவில்  அமர்ந்து இருந்த மேற்கு வங்கம் ஒரே குடும்பத்தை சேர்ந்த மொபீயுதீன்(58), அவரது மனைவி அதிராபீவி(51) அவர்களின் மகன் அமீனாகத்தூர்(23) ஆகியோர் படுகாயமடைந்தனர். புகாரின்படி போலீசார் மினி தண்ணீர் லாரி ஓட்டுனரான ஆதம்பாக்கம் என்ஜிஓ காலனியை ேசர்ந்த செல்வம்(35) என்பரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

* சென்னை ஈக்காட்டுத்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி விமலா (30). இவர், நேற்று முன்தினம் மாலை காஞ்சிபுரத்தில் நடந்த தனது உறவினர் வீட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றார்.  அதன் பின்னர், நேற்று காலை தாம்பரம் பஸ் நிலையத்திற்கு வந்து, ஈக்காட்டுத்தாங்கல் செல்ல பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது, பைக்கில் வந்த 2 பேர் திடீரென விமலா கழுத்தில் இருந்த 10 பவுன் செயினை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் பைக்கில் தப்பி சென்றனர்,

* புளியந்தோப்பு அடுத்த கனிகாபுரத்தை சேர்ந்தவர் அருண்குமார் (39). இவர் திருமண நிகழ்ச்சி மற்றும் கோயில் திருவிழாக்களுக்கு மைக்செட் அமைக்கும் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் உள்ள அம்மன் கோயில் திருவிழாவில் மைக் செட் அமைத்து அதை பராமரித்து வந்துள்ளார். அப்போது மது போதையில் அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த 4 பேர் கொண்ட கும்பல் சத்தம் அதிகமாக உள்ளதாக கூறி அருண்குமாரிடம்  தகராறில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அடித்து விட்டு தப்பிவிட்டனர்.  புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜீத் குமார் (26), லட்சுமணன் (25) ஆகிய 2 பேரை  கைது செய்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • KateWilliamNorthPak

  அரசு முறை பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து இளவரசர்: பழங்குடியினர் நடன நிகழ்ச்சியை கண்டு உற்சாகம்

 • SouthPhilippinesEQ

  பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 5 பேர் உயிரிழப்பு..கட்டிடங்கள் சேதம்!

 • 17-10-2019

  17-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • KimHorseRide1610

  பயேக்டு பனிமலைகளுக்கு இடையே வெள்ளைக் குதிரையில் பவனி வந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்: புகைப்படத்தொகுப்பு

 • NASASpaceSuit

  நிலவு பயணத்தில் பங்கேற்கும் விண்வெளி வீரர்களுக்கான 2 நவீன விண்வெளி உடைகள்: நாசா அறிமுகம்- புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்