SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தொடர்ந்து சரிவை சந்தித்த தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கியது: சவரனுக்கு ரூ.336 உயர்வு..!

2019-09-16@ 12:40:16

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.336 அதிகரித்துள்ளது. தங்கம் விலை கடந்த 2 மாதங்களாக கடும் ஏற்றத்துடன் காணப்பட்டது. கடந்த 4ம் தேதி காலையில் தங்கம் விலை வரலாற்றில் முதல் முறையாக பவுன் ரூ.30,120க்கு விற்கப்பட்டது. இதுவே தங்கம் விலை வரலாற்றில் புதிய உச்சமாக கருதப்பட்டது. இந்த விலை உயர்வு நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அன்றைய தினம் மாலையிலேயே தங்கம் விலை சற்று சரிந்து ஒரு பவுன் ரூ.29,928க்கு விற்கப்பட்டது.

அதன் பிறகு 5ம் தேதி ஒரு பவுன் ரூ.29,928க்கும், 6ம் தேதி ரூ.29,264, 7ம் தேதி ரூ.29,368, 9ம் தேதி ரூ.29,272க்கும், 10ம் தேதி ரூ.29,192க்கும், 11ம் தேதி ரூ.29,072, 12ம் தேதி ரூ.28912க்கும் தங்கம் விற்கப்பட்டது. அதனையடுத்து 13-ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.3,612க்கும், பவுன் ரூ.28,896க்கும் விற்கப்பட்டது. பின்னர் 14-ம் தேதி தங்கம் விலை சரிவை சந்தித்து காணப்பட்டது. கிராமுக்கு ரூ.28 குறைந்து ஒரு கிராம் ரூ.3,584க்கும், பவுனுக்கு ரூ.224 குறைந்து ஒரு பவுன் ரூ.28,672க்கும் விற்கப்பட்டது.

15-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை ஆகும். அதனால், அதே விலையிலேயே விற்பனை செய்யப்பட்டது. பின்னர் திங்கட்கிழமை தங்கம் மார்க்கெட் தொடங்கிய நிலையில் தங்கம் விலையில் அதிரடி மாற்றம் ஏற்பட்டது. அதாவது சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.336 அதிகரித்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.3,626 க்கும் ஒரு சவரன் ரூ.29,008 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.50.40 க்கு விற்பனையாகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 29-05-2020

    29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 28-05-2020

    28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-05-2020

    26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-05-2020

    25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-05-2020

    24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்