SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

‘இந்தி’யாவா...?

2019-09-16@ 02:07:50

‘ஒ ரே நாடு - ஒரே வரி, ஒரே நாடு - ஒரே கல்வி, ஒரே நாடு - ஒரே ரேஷன்’ என மத்திய அரசு அடுக்கிக் கொண்டு போகும் பட்டியலில் சமீபத்திய வரவு ‘ஒரே நாடு - ஒரே மொழி’  இந்தி தின கொண்டாட்டத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா அதற்கு பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார். இந்தியாவில் இந்தி பேசும் மக்கள் 43.6 சதவீதம் பேர் உள்ளனர். இதை வைத்துக் கொண்டே ‘இந்தியாவிற்கு பொதுமொழி என ஒன்று உண்டென்றால் அதற்கான தகுதி இந்திக்கு மட்டுமே உண்டு’ என டிவிட்டரில் அமித்ஷா அறை கூவல் விடுக்கிறார்.

அமித்ஷாவின் இந்த கருத்துக்கு இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்பலை எழுந்துள்ளது. தமிழ்மொழியை கண்ணாக காக்கும் தமிழகத்தில் அனைத்து கட்சிகளுமே இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மத்தியில் பாஜ அரசு பொறுப்பேற்ற நாள் முதலே இந்தி திணிப்பு மறைமுகமாக அரங்கேறி வருகிறது. நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் இந்தி போய் சேர வேண்டும் என்ற திட்டத்தை மத்திய அரசு முடிந்த வரை செயல்படுத்த முனைகிறது. ‘பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது’ கதையாய் தற்போது அமித்ஷா வாயாலே பாஜ அரசின் திட்டம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்மாநிலங்களை பொறுத்தவரை இந்தி என்பது இன்னமும் அந்நிய மொழியாகவே உள்ளது. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பலருக்கு இந்தி குறித்த அறிமுகமே கிடையாது. இச்சூழலில் தேசிய மொழி இந்தி என்பது பிரிவினைவாதத்தையே தூண்டும். இந்தி எதிர்ப்பு என்பது தமிழர்களின் இரத்தத்தில் ஊறியது. கடந்த காலங்களை கவனத்தில் கொண்டிருந்தால் மத்திய அமைச்சரிடம் இருந்து இப்படியொரு அறிவிப்பு எழவே வாய்ப்பில்லை. எழுத்து தேர்வுகளை இந்தியில் நடத்துதல், மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி அதிகாரிகளின் ஆதிக்கம் என தமிழகத்தில் இந்தியின் கிளைகள் மெல்ல மெல்ல மறைமுகமாக ஊடுருவி வருகின்றன.

தமிழகத்தின் கட்டுமானம், ஓட்டல் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் இந்திக்காரர்கள் இடம் பெற்று விட்டனர். நீட் உள்ளிட்ட தேர்வுகள் எதிர்காலத்தில் இந்தி டாக்டர்களுக்கே தமிழகத்தை மருத்துவ களமாக்கிவிடும். இதன் நீட்சியே அமித்ஷாவின் கருத்தாக தொனிக்கிறது. மத்திய அரசின் இந்த எண்ணத்தை முளையிலே கிள்ளி எறிவது நல்லது. இந்தியா ஒரே நாடாக இணைந்த நாளில் இருந்தே, இனம், மொழி, மதம் கடந்து அனைவரும் வேற்றுமையில் ஒற்றுமை கண்டு வருகிறோம். அமித்ஷாவின் கருத்து அதற்கு நிச்சயம் ஊறு விளைவிப்பதாகும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • KimHorseRide1610

  பயேக்டு பனிமலைகளுக்கு இடையே வெள்ளைக் குதிரையில் பவனி வந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்: புகைப்படத்தொகுப்பு

 • NASASpaceSuit

  நிலவு பயணத்தில் பங்கேற்கும் விண்வெளி வீரர்களுக்கான 2 நவீன விண்வெளி உடைகள்: நாசா அறிமுகம்- புகைப்படங்கள்

 • AirQualityDelhi1610

  அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் வேளாண் கழிவுகளால் டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் காற்று மாசு: புகைப்படங்கள்

 • CatalanSpainProtest

  கட்டலான் தலைவர்களின் சிறைத்தண்டனைக்கு எதிர்ப்பு..: ஸ்பெயினின் பல்வேறு இடங்களில் வெடித்தது போராட்டம்!

 • LebanonWildFire1610

  கடுமையான வெப்பம் மற்றும் அனல் காற்றினால் லெபனானில் வரலாறு காணாத காட்டுத்தீ..: சர்வதேச நாடுகள் உதவ கோரிக்கை!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்