SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உள்கட்சி விவகாரம் முடியும் வரை உள்ளாட்சி தேர்தல் வராது என்பது குறித்து சொல்கிறார்: wiki யானந்தா

2019-09-16@ 01:32:29

‘‘சுப பேனர் விபத்துல இறந்துட்டாங்க... அதற்கு காரணமானவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அட்மிட் பண்ணியிருக்காங்களாமே...’’ என்று சந்தேகத்துடன் கேட்டார் பீட்டர் மாமா.‘‘அது தான் ஆளுங்கட்சி... தன் மகன் கல்யாணத்துக்கு தங்களை வரவேற்று பேனர்  வைத்தவர் ஜெயமானவர் என்று சேலமும், தேனியும் நினைக்கிறதாம். அதனால அவரை கைது செய்யாமல் இருக்க முதலில் வழக்கு பதிவு செய்யும்போது வழக்கம்போல டிரைவரை அரஸ்ட் பண்ணாங்க... அச்சிட்ட நிறுவனத்துக்கு சீல் வைச்சாங்க... இப்ப விவகாரம் விஸ்வரூபம் எடுக்கவே பிரச்னைக்கு காரணமான ஜெயமானவர் கைதாகாமல் இருக்க... விஐபிக்களின் பார்முலாவான மருத்துவமனையில் திடீர் மாரடைப்பு காரணமாக சேர்தல் என்பதை கடைப்பிடித்துள்ளார். இந்நிலையில் வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக போலீசார் சேர்த்துள்ளனர். காரணம் நீதிமன்றம் கொடுத்த சவுக்கடி என்றே சொல்கிறார்கள். அதே சமயம் எப்ஐஆரில் பெயர் இருந்தும் அவரை போலீசார் நெருங்க முடியவில்லை. எப்ஐஆரில் அவரை காணவில்லை. ேதடி வருகிறோம் என்றே சொல்லி இருக்காங்களாம்...இலைக்கட்சி மேலிடத்துக்கு நெருக்கமாக இருந்தால் எந்த தவறை செய்தாலும் தப்பித்துக் கொள்ளலாம் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மாங்கனி கார்ப்பரேஷன்ல எக்கச்சக்க முறைகேடு நடந்து இருக்காமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘மாங்கனி கார்ப்ரேஷன்ல உள்ள ஒரு ஊழியரு பணியாளர்களுக்கு மாதாமாதம் கொடுக்குற சம்பளத்துலயே, ₹86 லட்சம் வரைக்கும் கையாடல் பண்ணிட்டாராம். அதுவும், கார்ப்பரேஷனுக்கு சம்பந்தமே இல்லாத அவரோட அம்மா, தம்பி, அவரோட மனைவினு குடும்பத்துல இருக்குற பேர எல்லாம் சம்பள பட்டியல்ல இணைச்சு, கோல்மால் பண்ணிட்டாரு. கார்ப்பரேசன் தணிக்கையில இந்த விவகாரம் தெரியவர, போலீசுக்கு புகார் போய், ஊழியர அரஸ்ட்டும் பண்ணிட்டாங்க. இவ்வளவு பெரிய மேட்டர ஒருத்தரே செய்யமுடியாதுனு சந்தேகப்பட்ட போலீசு, இதுக்கு பின்னாடி யாரெல்லாம் இருக்காங்கனு கேள்வி கேட்டாங்க. ஆனா யாருமே இல்ல, எல்லாத்துக்கும் நான் மட்டும் தான் பொறுப்புனு ைகதானவரு ஸ்டேட்மென்ட் கொடுக்குறாராம். இருந்தாலும், சம்பந்தப்பட்ட மண்டலத்துல இருக்குற அதிகாரிங்களும், ஊழியர்களும் நம்மள ஏதாவது போட்டு குடுத்துட்டா என்ன பண்றதுனு பீதியில இருக்காங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ஐந்தாம் வகுப்புக்கு பொதுத் தேர்வு என்ற முடிவு அரசியர்வாதிகள், பெற்றோர்களிடம் கடும் எதிர்ப்பை கிளப்பி இருக்காமே....’’ என்றார் பீட்டர் மாமா.‘‘கனவு காண்பது போல அன்றாடம் ஒரு உத்தரவை வெளியிடும் பள்ளிக்கல்வித்துறையை நினைத்து தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள் கிலியில் உள்ளனர். மத்திய அரசின் தேசிய கல்விக்கொள்கைபடி மூன்றாம் வகுப்பிலிருந்து பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்ற தமிழக அரசின் முயற்சிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த நிலையில், திடீரென இந்த ஆண்டில் இருந்து 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் கருதி, பள்ளிகளில் பெற்றோர் - ஆசிரியர் சங்க கூட்டத்தை நடத்தவேண்டும் என்று இயக்கம் நடத்த சில அமைப்புகள் முடிவெடுத்துள்ளன. இதனால் பள்ளிக்கல்வித்துறைக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘வானளாவிய அதிகாரம் ெகாண்டவரை சேலம்காரர் பார்க்க மறுத்தாரா...’’ என்று சந்தேகத்தை கிளப்பினார் பீட்டர் மாமா.‘‘வானளாவிய அதிகாரம் எனக்கு உள்ளது என்று ஒரு காலத்தில் தமிழகத்ைதயே ஆட்டி படைத்தார். அவரை பார்த்து மத்திய அரசே ஒரு சமயம் ஆடிப்போனது. ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு பல்வேறு சட்ட நடவடிக்கை மூலம் சேலம்காரர் தரப்புக்கு செக் வைக்கப்பட்டது. இதற்கு பின்னால் மூலக்காரணமாக இருந்து செயல்பட்டது வானளாவிய அதிகாரம் கொண்டவர்தானம். அவருக்கு உடல் நிலை சரியில்லை என்று தேனிகாரர் நேரில் போய் பார்த்து ஆறுதல் சொன்னாராம். ஆனால் சேலம்காரர் அவரை கண்டுகொள்ளவே இல்லையாம்... இதனால் வானளாவிய அதிகாரம் கொண்டவர் அப்செட்டில் இருக்கிறாராம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘உள்ளாட்சி தேர்தல் வருமா... வராதா...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘நிச்சயம் வராது... இலை கட்சியின் பொதுக்குழு சுமூகமாக முடியும் வரை உள்ளாட்சி தேர்தல் வராது. இலைக்கட்சியின் தற்போதையை ‘பை-லா’ திடீரென திருத்தப்படலாம் என்ற சந்தேகம் முக்கிய நிர்வாகிகளுக்கு ஏற்பட்டு இருக்காம். அதில் முக்கிய தலைகளில் பெரும்பாலானவர்கள் ஒரு மூன்றெழுத்துக்காரரின் பக்கமே இருக்காங்களாம். அவரும் உற்சாகமாக இருக்கிறாராம். எனவே, அதற்குள் மற்றவர்களை சமாதானப்படுத்தி பொதுக்குழுவில் ஏகமனதாக தீர்மானம் கொண்டு வந்து ஒற்றை தலைைமை என்கிற முடிவோடு கூட்டத்தை முடிக்க முடிவு செய்து இருக்காங்களாம். அதனால இந்த விஷயங்கள் எல்லாம் சுமூகமாக முடிந்த பிறகு தான் உள்ளாட்சி தேர்தல் நடக்குமாம்.. அதனால இப்போதைக்கு கட்சி நிர்வாகிகளை கைப்பிடிக்குள் கொண்டு வரும் நடவடிக்கை தான் நடந்து வருதாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘புதிய மோட்டர் வாகன சட்டம் வருமா...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘ஏற்கனவே நீட், 5ம் வகுப்பு பொதுத்தேர்வு, ைஹட்ரோகார்பன் உள்பட பல விஷயங்களில் தாமரையின் அடிமையாக இலை இருக்கிறது என்ற பெயர் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் புதிய மோட்டார் வாகன சட்டத்தை கொண்டு வந்தால் ஆயிரக்கணக்கான லாரிகளை பார்கிங் செய்துவிட்டு ஓனர்கள் மாதசம்பளத்துக்கு செல்ல வேண்டிய நிலையில்தான் இருக்காங்களாம்... ஆட்டோ டிரைவர்களில் பலர் இந்த சட்டம் அறிமுகமானால் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கே போய் விவசாயம், கட்டிட வேலை, கூலித் தொழில் போன்றவற்றை செய்வதை தவிர வேறு வழியில்லை என்று நினைக்கிறார்களாம். அதேபோல வாக்கு உள்ள இளைய தலைமுறையினர் இந்த சட்டம் வந்தால் அப்படியே ஆளுங்கட்சிக்கு எதிராக திரும்பும் வாய்ப்பு உள்ளதாக இலை தரப்புக்கு அறிக்கை போய் இருக்கிறதாம். உள்ளாட்சி தேர்தல் வந்தால் இது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்... கட்சி தலைநிமிரவே முடியாது என்று அதில் சொல்லப்பட்டு இருக்கிறதாம். அதனால் இந்த சட்டத்தை அமல்படுத்துவதில் அவசரம் காட்ட வேண்டாம் என்று இலை தரப்பு இப்போதைக்கு முடிவு செய்து இருக்கிறதாம்...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 25-05-2020

  25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 24-05-2020

  24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-05-2020

  23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-05-2020

  23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 22-05-2020

  22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்