SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

9-வது மாதத்தின் 11-வது நாளில் இரவு 9 மணி 11 நிமிடத்தில் பிறந்த குழந்தையின் எடை 9 பவுண்ட் 11 அவுன்ஸ்: அமெரிக்காவில் அபூர்வம்

2019-09-15@ 10:59:03

வாஷிங்டன்: 9-வது மாதத்தின் 11-வது நாளில் இரவு 9 மணி 11 நிமிடத்தில் பிறந்த குழந்தையின் எடை 9 பவுண்ட் 11 அவுன்ஸ் என்பது அபூர்வ நிகழ்வாக அங்கு பார்க்கப்படுகிறது. அமெரிக்க ராணுவ தலைமையகம் வாஷிங்டன் பென்டகன் மீதும், நியூயார்க் உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுர கட்டிடம் மீதும் பின்லேடனின் அல்கொய்தா பயங்கரவாதிகள் விமானங்களை மோதி அதி பயங்கர தாக்குதல்களை நடத்தி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொன்று குவித்தனர். 2001-ம் ஆண்டு, 9-வது மாதமான செப்டம்பர் மாதம் 11-ந் தேதி நடந்த இந்த தாக்குதல்கள் உலக வரலாற்றின் கரும்புள்ளியாக அமைந்துள்ளன. கடந்த 11-ந் தேதி இந்த தாக்குதலின் 18-வது நினைவு தினம் அமெரிக்கா முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டது.

அந்த நாளில் டென்னிசி மாகாணம், ஜெர்மன்டவுன் நகரில் உள்ள மெத்தடிஸ்ட் ஆஸ்பத்திரியில் இரவு 9 மணி 11 நிமிடத்தில் கேமட்ரியோன் மூர் பிரவுன் என்ற நிறைமாத கர்ப்பிணிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இந்தக் குழந்தையின் எடை 9 பவுண்ட் 11 அவுன்ஸ் ஆகும். 9-வது மாதத்தின் 11-வது நாளில் இரவு 9 மணி 11 நிமிடத்தில் பிறந்த குழந்தையின் எடை 9 பவுண்ட் 11 அவுன்ஸ் என்பது அபூர்வ நிகழ்வாக அங்கு பார்க்கப்படுகிறது. இதுபற்றி கேமட்ரியோன் மூர் பிரவுன் கூறும்போது, “பேரழிவு மற்றும் அழிவுகளுக்கு மத்தியில் எனது மகள் புதிய வாழ்வாக அமைந்திருக்கிறாள்” என பெருமிதத்துடன் குறிப்பிட்டார். இந்த குழந்தைக்கு பெற்றோர் கிறிஸ்டினா என பெயர் சூட்டி மகிழ்கின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • siva5

    1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு!

  • death5

    கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்!!!

  • coronaa5

    புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்

  • locust4

    ராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு!: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை!!!

  • ingland4

    இங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்