SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கட்டாய சுமை

2019-09-15@ 03:35:06

தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தின்கீழ் அரசு பள்ளிகளும் அரசு உதவி பெறும் பள்ளி களும் தனியார் பள்ளிகளும் செயல்படுகின்றன. மேலும் மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ பள்ளிகளும் அதிக அளவில் உள்ளன. மாநிலத்தில் கல்வி கற்பதை ஊக்குவிக்கும் நேரத்தில், அரசு கிராமங்கள் முதல் பெரிய நகரங்கள் வரையில் பள்ளிகளை தொடங்கி, மதிய உணவுத் திட்டத்தையும் அறிமுகம் செய்து பின்னர் சத்துணவு திட்டமாக மேம்படுத்தப்பட்டு அமலில் உள்ளது. வறுமையால் மாணவர்கள் ஆரம்பக் கல்வியைக் கூட கற்க முடியாத நிலை இருந்தால் அவர்களுக்கு உதவும் வகையில் கல்வி உதவித் தொகை, இலவச சீருடை, இலவச காலணிகள், இலவச சைக்கிள் என்று பல்வேறு சலுகைகளை அளித்து ஊக்கப்படுத்தி வந்தது.

இதனால், மாநிலம் எழுத்தறிவில் முன்னேறியது. இந்த நிலையில், ஆட்சியாளர்களின் நிர்வாகக் குறைபாடு, தொலைநோக்கு திட்டமிடல் இல்லாததால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பாடத்திட்டத்தில் மாற்றம் எதுவும் செய்யாமல் விட்டு விட்டது. இதன் பாதிப்பு, மத்திய அரசு புதிதாக அறிமுகம் செய்த நீட் மருத்துவக் கல்வி நுழைவுத் தேர்வை எதிர்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த 2009ம் ஆண்டு கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. அந்த சட்டம் 1.4.2010 முதல் அனைத்து மாநிலங்களிலும் நடைமுறைக்கு வந்தது.

கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் முதல் தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் நடைமுறையில் உள்ளது. பத்து ஆண்டுகள் கடந்த நிலையில், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு கல்வி ஆண்டின் முடிவிலும் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்த வேண்டும் என்பதுதான். 2019-2020ம் கல்வி ஆண்டில் இருந்து 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதியில் பொதுத் தேர்வு நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. தற்போது 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வு என்று அறிவிக்கப்பட்டுள்ளது, மாணவர்கள் மீதான சுமையை அதிகரிக்கும் என்று சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மாணவர்கள் ஆர்வமுடன் கல்வி கற்பதற்கான சூழலை ஏற்படுத்துவதோடு, தரமான கல்வியை அவர்களுக்கு வழங்குவதையும் உறுதி செய்யும் பொறுப்பு அரசுக்கு உள்ளது. வெளிநாட்டில் கல்வி நிலையை அறிந்து வந்து தமிழகத்தில் செயல்படுத்தப்போவதாக அமைச்சர், அதிகாரிகள் குழுவுடன் அங்கு சென்று வந்தார். அந்நாட்டில் 7 வயதில் குழந்தைகளுக்கு பாடமே இல்லை என்பதையும், எப்போது அவர்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது என்பதையும் கேட்டறிந்து வந்தாரா என்பது அவர்களுக்குத்தான் வெளிச்சம்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-10-2019

    19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • boniaredlady

    தனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்!

  • chisa

    தகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா

  • karvachauth_2019

    கணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்

  • 18-10-2019

    18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்