SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அபராதம் குறையுமா?

2019-09-14@ 00:13:06

மோட்டார் வாகன சட்டத்தின்படி போக் குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு இந்தியா முழுவதும் அதிகபட்ச அபராதம் விதிக்க மத்திய அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருசக்கர வாகனம், லாரி, ஆட்டோ, கார் என்று அனைத்து வாகனங்களையும் போக்கு வரத்து போலீசார் சோதனை நடத்தி லட்சக்கணக்கில் அபராதம் விதித்து வருகின்றனர். இந்நிலையில், அபராதம் குறைப்பது குறித்து அந்தந்த மாநில அரசு முடிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார். இவரது அறிவிப்புக்கு முன்பே குஜராத் மாநில அரசு ஹெல்மெட் இல்லாமல் பயணிப்பவர்களுக்கு வசூலிக்கும் அபராத தொகையை 1000லிருந்து 500 ஆக குறைத்துவிட்டது. இதை தொடர்ந்து கேரளாவும், கர்நாடக மாநிலமும் அபராதத்தை குறைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை முடிவு எடுக்கப்படவில்லை. ஆனால் சாலைகளில் ஆங்காங்கே நின்று போக்குவரத்து போலீசார் தங்கள் விருப்பப்படி அபராதத்தை விதித்து வருகின்றனர்.

ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுவதால் மட்டும் தான் விபத்து ஏற்படுகிறதா?, சென்னை சாலைகளின் தரம் எப்படி உள்ளது என்பதை அரசு கவனிக்காதா? அண்ணாசாலை, நுங்கம்பாக்கம் உள்பட பிரதான சாலைகளில் ஆங்காங்கே பள்ளங்கள், மழைநீர் அப்படியே தேங்கி நிற்கிறது. மாநகராட்சி, மின்சார வாரியம், குடிநீர் வாரியம் தோண்டும் பள்ளங்கள் மூடப்படுவது கிடையாது. வெறும் மணலை போட்டு மூடிவிடுகிறார்கள். மாநகராட்சி அங்கு தார்சாலை அமைப்பதே கிடையாது. இதனால் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் நிலை தடுமாறி கீழே விழுகிறார்கள். பெண்கள் அவதிப்படுகிறார்கள். போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதையெல்லாம் போக்குவரத்து போலீசார் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லமாட்டார்களா என்று வாகன ஓட்டிகள் கேள்வி கேட்க தொடங்கிவிட்டனர்.

அலுவலகம் செல்லும் ஆண்கள், பெண்கள், சேல்ஸ், மார்க்கெட்டிங் உள்பட வியாபாரத்தில் உள்ளவர்கள் அனைவருக்கும் இருசக்கர வாகனம் என்பது அத்தியாவசிய தேவையாகிவிட்டது. இவர்கள் அலுவலகம் மூலமாகவோ, வங்கியிலோ இருசக்கர கடன் பெற்று வாகனங்களை வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். இதுபோன்ற நிலையில் அபராதம் என்ற பெயரில் அவர்களின் மாத சம்பளத்தையே பறித்துகொள்வது ஏற்புடையதல்ல. எனவே, அபராத தொகையை குறைக்க தமிழக அரசு முன்வரவேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாகும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-05-2020

    26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-05-2020

    25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-05-2020

    24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்