SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிறைப்பறவையின் ஆட்களுக்கு தொடர்ந்து கல்தா கொடுத்து வரும் கிப்ட் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2019-09-13@ 00:27:16

‘‘சிறைப்பறவை வெளியில் வருவதற்குள் கட்சியை முழுசாக தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர கிப்ட் ரகசிய திட்டம் தீட்டியிருக்காமே.. உண்மையா..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘காமெடி நடிகர்களுக்கு எல்லாம் பதவிகளை வாரி வழங்கி வரும் கிப்ட் கட்சியின் தொண்டர் செல்வாக்கு உள்ள நபர்களை கழட்டி விடும் வேலையை பார்த்து வருகிறாராம். குறிப்பாக சிறைப்பறவையின் பெயரை சொன்னாலே சீறி  விழுகிறாராம். இனி அவங்க சிறையில் இருந்து வெளியே வந்து கட்சியை நடத்துவதெல்லாம் முடியாத கதை என்று கிப்ட்டின் அடிப்பொடிகள் சொன்னதை கேட்டுதான் இந்த ஆட்டமாம். அப்புறம் கிச்சன் கேபினட் பேச்சை கேட்டும் பணத்தை பல  இடங்களில் முதலீடு செய்துள்ள பணம், பினாமிகளிடம் உள்ள பணம், பினாமி சொத்துகளை விற்றும் அது தன் கைக்கு முழுமையாக கைக்கு வந்ததும்... கிப்ட் அரசியலில் இருந்து ஓய்வு ெபற்றாலும் பெறலாம் என்கிறார்கள் அவரின்  அடிப்பொடிகள். நமக்கு அரசியல் சரிப்படாது... பணம் நிறைய செலவழிக்கணும். அதற்கு சிறைப்பறவை தான் சரி... நாம ஒதுங்கிடலாம்... அவரு சிறைக்கு போனாலும் போனாரு நாம பண்ண லந்துல கட்சியே காணாமல் போய்விட்டது... எனவே,  நாம வழக்கம்போல பாண்டிச்ேசரிக்கு போய் செட்டிலாயிடலாம் என்று அடிப்பொடிகள் கொளுத்தி போட... கிப்ட் ஆழ்ந்த யோசனையில் இருப்பதாக பேச்சு ஓடுது...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘காக்கி வேஸ்ட்... தூக்கு தீப்பந்தத்தை என்று இளைஞர்கள் இறங்கிட்டாங்களாமே..’’ ‘‘திருப்பத்தூரிலும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் கடந்த 15 நாட்களாக முகமூடி கொள்ளையர்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. சுமார் 150 சவரன் நகை, 10 லட்ச ரூபாய் ரொக்கம் கொள்ளை போனது. இதனை கண்காணிக்க வேண்டிய  காக்கி அதிகாரியான ‘கோல்டு’ ஆனவர், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் காக்கிகளை நம்பி பயனில்லை என்ற முடிவுக்கு வந்த திருப்பத்தூர் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் கையில் தீப்பந்தத்துடன்  கொள்ளையர்களை பிடிக்க களம் இறங்கியுள்ளார்களாம். ‘நாங்கள் போலீசை நம்பி ஏமாந்து போகிறோம். ஆகையால் நாங்களே துணிந்து நிற்கிறோம்’ என்று ஊருக்கு 10 இளைஞர்கள் சேர்ந்து ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால்  போலீசாரோ எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் திருப்பத்தூர் பகுதியில் கஞ்சா, கள்ளச்சாராயம் உள்ளிட்ட அனைத்து சமூக விரோத செயல்களுக்கு துணை போவதுடன், ‘கல்லா’ கட்டி வருகின்றனர் என்றும் குமுறுகின்றனர் மக்கள்...’’  என்றார் விக்கியானந்தா.‘நாங்குநேரியில என்ன விசேஷம்...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற வசந்தகுமார், மக்களவை தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வென்றார். இதையடுத்து அவர் நாங்குநேரி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததால் அந்தத் தொகுதி  இடைத்தேர்தலை சந்திக்க உள்ளது. இதற்காக நாங்குநேரியில் காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் நடத்தப்பட்டது. மாநில தலைவர் கே.எஸ்.அழகிரியும், மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத்தும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். நாங்குநேரியில் எந்த  கட்சி போட்டியிடும் என்பதை கூட்டணி தலைமைதான் முடிவு  செய்யும் என மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கறாராக சொல்லி விட்டார். இதனால் எனக்கு, உனக்கு என போட்டி போட்டு விவாதம் நடத்தி வந்த காங்கிரஸ் கட்சியினர்  அமைதியாகி விட்டனர்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இலை கட்சியின் பொதுக்குழு எப்படி இருக்கும்...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘ஏறக்குறைய கட்சியை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டார் சேலம்காரர். சீனியர் அமைச்சர்களே வாய் பொத்தி இருப்பதின் ரகசியம்... துறை அமைச்சரா இருக்கிறதை விட சேலம்காரர் கொடுக்கிறது பெரிசு. அதனால வயசான  காலத்துல நாலு காசு பார்த்தோமா... பதவியில் இருந்தோமானு இருந்துட்டு போயிடலாம்னு தன் அடிப்பொடிகளுடன் சொல்றாங்களாம்... உள்ளாட்சி தேர்தல் வந்தால் சீட் வாங்கி தர்றேன்... பொதுக்குழுவில் சேலம்காரருக்கு சப்போர்ட்  பண்ணுங்கனு சீனியர்களே வாய் திறந்து பொதுக்குழு உறுப்பினர்களிடம் சொல்லும் அளவுக்கு சேலம்காரரின் கை ஓங்கி இருக்காம். தேனிகாரர் எரிமலை மாதிரி அமைதியாக இருக்கிறார். எப்போது வெடிக்கும் என்பது யாருக்கு தெரியும்...’’  என்றார் விக்கியானந்தா.‘‘என்ன விக்கி சேலம்காரர் வந்துட்டாரு... என்ன நடக்கும்...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘உள்ளாட்சி தேர்தலுக்கு இலை கட்சி தயாராகிட்டு இருக்கு. அதனால சாலை, மின்விளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாநில தலைமை உத்தரவிட்டுள்ளதாம். அதை  வைத்து பார்த்தால் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிகுறி தெரிகிறது. மேலும் இளைஞர்களின் வாக்குகளை பெறுவதற்காக மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை தள்ளிப்போடுவதா அல்லது அபராதத்தை குறைப்பதா என்று யோசனை செய்து  வருகிறார்களாம் அதிகாரிகள். இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் நீட் தேர்வை கோட்டை விட்டோம் என்ற பாணியில் நம்ம மாநிலத்தவர்கள் பாதிக்க தாமரை அரசுக்கு மாநில அரசு துணை ேபாகிறது.  அதனால்தான் மற்ற மாநிலங்களை போல மோட்டார் வாகன சட்டத்தில் அபராதத்தை குறைக்கலாமா என்று சேலம்காரர் யோசித்து வருகிறாராம். டெல்லியில் இருந்து சிக்னல் கிடைத்ததும் அபராதம் குறித்து முறையான அரசாணை  வெளியாகும் என்கிறார்கள் அதிகாரிகள்...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 26-05-2020

  26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 25-05-2020

  25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 24-05-2020

  24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-05-2020

  23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-05-2020

  23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்