SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சில்லி பாயிண்ட்…

2019-09-12@ 01:09:13

* பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் இருந்து பாதுகாப்பு காரணங்களுக்காக முன்னணி வீரர்கள் விலகிய நிலையில், ஒருநாள் போட்டிகளுக்கான இலங்கை அணியின் கேப்டனாக லாகிரு திரிமன்னே மற்றும் டி20 போட்டிகளுக்கான கேப்டனாக தசுன்  ஷனகா நியமிக்கப்பட்டுள்ளனர்.
* ஆஷஸ் தொடருக்கான ஆடுகளங்கள் திருப்தி அளிக்கவில்லை. இங்கிலாந்து வீரர்களுக்கு சாதகமாக இருக்கும் வகையில் பிட்ச் அமைக்க தவறியது ஏமாற்றமளிக்கிறது என்று நட்சத்திர வேகம் ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியுள்ளார்.
* ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் பைனலில் இங்கிலாந்திடம் தோற்றதை இன்னும் எங்களால் மறக்க முடியவில்லை. ஒவ்வொரு நாளும் அந்த நினைவு எங்களை வாட்டுகிறது என்று நியூசிலாந்து கேப்டன் கேன்  வில்லியம்சன் கூறியுள்ளார்.
* டி20 போட்டிகளில் கிறிஸ் கேல் அடித்த 22வது சதம் இது. அடுத்த இடத்தில் உள்ள மைக்கேல் கிளிஞ்சர் 8 சதம் மட்டுமே அடித்துள்ளார். ஆரோன் பிஞ்ச், டேவிட் வார்னர், லூக் ரைட், பிரெண்டன் மெக்கல்லம் தலா 7 சதம் விளாசி 3வது  இடத்தை பகிர்ந்துகொண்டுள்ளனர்.
* செயிண்ட் கிட்ஸ் அணி 242 ரன் எடுத்து வென்றது, டி20 போட்டிகளில் வெற்றிகரமாக துரத்தப்பட்ட 2வது அதிகபட்ச ஸ்கோராக அமைந்தது. முன்னதாக, 2018ல் நியூசிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்புக்கு 245 ரன் எடுத்து  வென்று முதலிடம் வகிக்கிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-09-2019

    17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • dragan_canadaa

    கனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்

  • gurgaun_cameraa1

    குர்கானில் உலகின் மிகப்பெரிய கேமரா அருங்காட்சியகம் : வரலாற்றை கண்முன்னே கொண்டு வரும் 2000 பழங்கால கேமராக்கள்

  • apayin_kuppai11

    ஸ்பெயினில் வரலாறு காணாத கனமழை : வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட கார்கள் குப்பை போல குவிந்துள்ள அவலம்

  • protest_dailymail111

    சீனாவின் இலையுதிர்கால திருவிழா :மலைகளில் ‘போராட்டம் சார்ந்த வாசகத்துடன்’ விளக்குகளை ஏற்றிய ஹாங்காங் போராட்டக்காரர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்