SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா மோதும் கடைசி டெஸ்ட் இன்று தொடக்கம்

2019-09-12@ 01:08:00

லண்டன்: ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து  ஆஸ்திரேலியா மோதும் 5வது மற்றும் கடைசி போட்டி லண்டன், ஓவல் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. பாரம்பரியமிக்க இந்த தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என முன்னிலை பெற்றதுடன் ஆஷஸ் குடுவையையும் தக்கவைத்துக் கொண்டது. அந்த அணியின் ஸ்டீவன் ஸ்மித் 3 போட்டியில், 5 இன்னிங்சில் 671 ரன் (அதிகம் 211, சராசரி 134.20, சதம்  3, அரை சதம் 2) குவித்து மிகச் சிறந்த பார்மில் உள்ளார். ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையிலும் விராத் கோஹ்லியை பின்னுக்குத் தள்ளி நம்பர் 1 அந்தஸ்தை மீண்டும் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கடைசி டெஸ்டில் வென்று 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றும் முனைப்புடன் ஆஸ்திரேலியா களமிறங்குகிறது. அதே சமயம், இந்த போட்டியில் வெற்றியை வசப்படுத்தி தொடரை சமன் செய்ய இங்கிலாந்தும்  வரிந்துகட்டுவதால் ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • greexe_111

    கிரீ்ஸ் நாட்டின் தனாகரா விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சி : பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

  • octo_111

    ஜெர்மனியில் களைகட்டியது அக்டோபர் ஃபெஸ்ட் : உலகின் அனைத்து வகையான பீர்களை ருசித்து மகிழும் பீர் திருவிழா

  • batman_tshirt11

    காமிக்ஸ் உலகின் நாயகன் பேட்மேன் வயது 80 : பேட்மேன் வேடம் அணிந்து ரசிகர்கள் உற்சாகம்; சிக்னல்கள், டி.சர்ட்டுகளில் பளிச்சிட்ட பேட்மேன்

  • circle_of_lightss1

    மாஸ்கோவில் ஒளிவட்டம் திருவிழா : மின்னும் விளக்கொளியில் மாயத் தோற்றங்களை கண்டு ரசித்த மக்கள்

  • climate_strike11

    பருவநிலை மாற்றத்திற்கு எதிராக இந்தியா உள்ளிட்ட 150 நாடுகளில் பேரணி : பூமியைப் பாதுகாக்க கோரி பதாகைகளை ஏந்தி இளைஞர்கள் முழக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்