SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பொள்ளாச்சி சம்பவம் போல் வீடியோ எடுத்து 20 பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்த கும்பல்

2019-09-12@ 00:19:07

ஆத்தூர்: சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் கல்லூரி மாணவியை மிரட்டி கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்டு வந்த கும்பல் மீது போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கும்பல் 20க்கும் மேற்பட்ட பெண்களை பலாத்காரம் செய்துள்ளது அம்பலமாகியுள்ளது. ஆத்தூர் அருகே அம்மம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இவர், தினமும் கல்லூரி பஸ்சிலேயே சென்று வந்துள்ளார். அப்போது, ஒரு வாலிபர் பைக்கில் பின்தொடர்ந்து வருவாராம். இதில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இதனை நோட்டமிட்ட அம்மம்பாளையம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் 5 பேர், மாணவி தனது காதலனுடன் தனிமையில் இருந்தபோது ரகசியமாக படம் பிடித்துள்ளனர். அதனை அந்த மாணவியிடம் காண்பித்து, காதலனுடன் இருக்கும் வீடியோ காட்சியை வெளியிடாமல் இருக்க வேண்டுமானால், தங்களது ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியுள்ளனர். பின்னர் 5 பேரும் சேர்ந்து மாணவியை மிரட்டி கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த காட்சியையும் மாணவிக்கு தெரியாமல் செல்போனில் படம் பிடித்து வைத்துக்கொண்டு தங்களது ஆசைக்கு அவ்வப்போது இணங்க வேண்டுமென மிரட்டல் விடுத்து வந்துள்ளனர்.

இதனால், அதிர்ச்சிக்குள்ளான அந்த மாணவி சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அந்த மாணவியின் பெற்றோரிடம் போலீசார் உறுதி அளித்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, 5 பேர் கும்பலில் குறிப்பிட்ட கல்லூரி வாகனத்தை ஓட்டும் டிரைவர் ஒருவரும் இடம்பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது. அவர் மூலம் மேலும் பல மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லக்கூடிய பெண்கள் என 20க்கும் மேற்பட்டவர்களை இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் பல்வேறு காரணங்களை காட்டி தங்களது வலையில் வீழ்த்தி உல்லாசம் அனுபவித்துள்ளனர். அப்போது, அவர்களுக்கு தெரியாமல் செல்போனில் படம் பிடித்து தொடர்ந்து மிரட்டல் விடுத்து தங்களது இச்சைக்கு பலியாக்கியுள்ளதும், அந்த காட்சிகளை பரவ விட்டு லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்து வருவதும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • greexe_111

  கிரீ்ஸ் நாட்டின் தனாகரா விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சி : பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

 • octo_111

  ஜெர்மனியில் களைகட்டியது அக்டோபர் ஃபெஸ்ட் : உலகின் அனைத்து வகையான பீர்களை ருசித்து மகிழும் பீர் திருவிழா

 • batman_tshirt11

  காமிக்ஸ் உலகின் நாயகன் பேட்மேன் வயது 80 : பேட்மேன் வேடம் அணிந்து ரசிகர்கள் உற்சாகம்; சிக்னல்கள், டி.சர்ட்டுகளில் பளிச்சிட்ட பேட்மேன்

 • circle_of_lightss1

  மாஸ்கோவில் ஒளிவட்டம் திருவிழா : மின்னும் விளக்கொளியில் மாயத் தோற்றங்களை கண்டு ரசித்த மக்கள்

 • climate_strike11

  பருவநிலை மாற்றத்திற்கு எதிராக இந்தியா உள்ளிட்ட 150 நாடுகளில் பேரணி : பூமியைப் பாதுகாக்க கோரி பதாகைகளை ஏந்தி இளைஞர்கள் முழக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்