SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிவகங்கை அருகே 17ம் நூற்றாண்டை சேர்ந்த குமிழி மடைத்தூண் கண்டுபிடிப்பு

2019-09-12@ 00:17:57

சிவகங்கை:  சிவகங்கை அருகே கோவானூரில் 17ம் நூற்றாண்டை சேர்ந்த குமிழி மடைத்தூண் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் காளிராசா கூறியதாவது:  சிவகங்கை அருகே கோவானூரில் 17ம் நூற்றாண்டை சேர்ந்த குமிழி மடைத்தூண் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. கோவானூர் பெரிய கண்மாய் என அழைக்கப்படுகிற மேலக்கோவானூர் கண்மாயில் மக்களால் அளவைக்கல், குத்துக்கல் என்று கூறப்படும் இரட்டைத்தூண் குமிழி மடை ஒன்று காணப்படுகிறது. இத்தூண்களின் உள்பகுதிகளில் கல்வெட்டு எழுத்து உள்ளது.

சோழர், பாண்டிய மன்னர்கள் காலந்தொட்டு குமிழி மடை அமைப்பு ஏரி, குளங்கள் கண்மாய்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவை நீரையும், வண்டலையும் தனித்தனியே வெளியேற்றுகிற வகையில் அமைக்கப்படும். பொதுவாக மடைகள் கரையோரங்களில் காணப்படும். ஆனால் கோவானூரில் உள்ள குமிழிமடை கண்மாயின் பள்ளமான நடுப்பகுதியில் காணப்படுகிறது. மடைத்தூண் சுமார் 10 அடி உயரமுள்ளது. தூணின் வெளிப்புறத்தில் முகம் போன்ற அழகிய வடிவமைப்பு 2 தூண்களிலும் காணப்படுகின்றன என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • award20

    விளையாட்டின் ஆஸ்கர் எனப்படும் லாரியஸ் விருதை கைப்பற்றிய சச்சின் டெண்டுல்கர்!!

  • tenish2020

    டென்னிஸ் புயலால் வெள்ளக்காடாகிய இங்கிலாந்து நகரங்கள்...மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

  • america20201

    இந்தியாவிற்கு வருகை புரியும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்ணில் படாமல் இருக்க சுவர் கட்டி மறைக்கப்படும் குஜராத் குடிசைப்பகுதி

  • mumbai fire20

    மும்பையில் ஜிஎஸ்டி பவனில் 8 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து

  • 18-02-2020

    18-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்