SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு நீட் தேர்வில் விலக்கு கோரிய மனு உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு

2019-09-12@ 00:17:47

புதுடெல்லி: இந்தியாவில் மருத்துவம் படிக்க வெளிநாட்டு வாழ் இந்திய மாணவர்களுக்கும் நீட் தேர்வு கட்டாயம் என்பதை எதிர்த்து மலேசியாவை சேர்ந்த விமேஷிகா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார். இவர் இந்திய வம்சாவளி ஆவார். மனுவில் கூறியிருப்பதாவது:  வெளிநாட்டுவாழ் இந்தியர்களாக இருந்தாலும் இந்தியாவில் மருத்துவம் படிக்க நீட் தேர்வில் கண்டிப்பாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆனால், நீட் தேர்வு எழுத வேண்டுமெனில் ஆங்கிலத்தையும் ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும் என விதி உள்ளது. மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாட்டில் படிக்கும் மாணவர்கள் பலர் ஆங்கிலத்தை தனியாக ஒரு பாடமாக படிப்பதில்லை எனவே அவர்கள் நீட் தேர்வு எழுத தகுதி இல்லாதவர்களாகி விடுகின்றனர். எனவே வெளிநாட்டு இந்தியர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி இந்து மல்கோத்ரா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.  நீதிபதி பிறப்பித்த உத்தரவில்,'நீட் தேர்வு என்பது நாடு முழுவதும் ஒரே மாதிரியாக கடைப்பிடிக்கப்பட்டு வரப்படும் ஒரு நடைமுறையாக உள்ளது. அதனால் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு என எந்தவித தனி சலுகைகளையும் உச்ச நீதிமன்றத்தால் இந்த விவகாரத்தில் வழங்க முடியாது என அவரது கோரிக்கையை நிராகரித்த நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து நேற்று உத்தரவிட்டார். இருப்பினும் இதில் மனுதாரர் தமிழகத்தை சார்ந்தவர் என்பதால் அவர் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி வேண்டுமானால் முறையிடலாம் என அறிவுறுத்தப்பட்டது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-02-2020

    22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • UkraineCoronaProtest

    கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்!

  • puthu2020

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்!!

  • rayil21

    ஆஸ்திரேலியாவில் நொடி பொழுதில் தரம்புரண்ட பயணிகள் ரயில்: 2 பேர் பலி...ஏராளமானோர் படுகாயம்!

  • coronaa_vugaan11

    கொரொனா வைரஸ் வராம பின்ன என்ன வரும்? - பறவைகள், முயல்கள், வெளவால்கள், பாம்புகள் விற்கப்படும் வுஹான் கடல் உணவு சந்தை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்