SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

wiki யானந்தா

2019-09-12@ 00:17:36

‘‘என்ன கல்வித்துறையே கலங்கிக்கிடக்கிறதே...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கல்வித்துறையில் உள்ள அதிகாரிகள் டெல்லி மேலிடத்தின் சொல்படி நடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. தமிழக அரசின் வருவாயில் அதிகம் ஆசிரியர்களுக்கே செல்வதாக அதிகாரிகள் சிலர் போட்டுகொடுத்துள்ளனர். மேலும் என்றைக்கும் ஆசிரியர்கள் இலை கட்சிக்கு ஆதரவாக இருந்ததில்லை. எனவே, அவர்களை பிரித்து ஆள்வதுதான் சிறப்பு. அதனால் அதிகம் மாணவர்கள் இல்லாத பள்ளிகளை நூலகமாக மாற்றிவிட்டனர். இந்த வகையில் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு பல கோடி சம்பளம் என்ற செலவினம் குறையும்...’’ என்று இழுத்தார் விக்கியானந்தா. ‘‘அப்புறம்’’ ‘‘அதேபோல பள்ளிகளின் எண்ணிக்கை குறைப்பு, ஆசிரியர்களை டிரான்ஸ்பர் செய்வது... பள்ளிகளை குறைத்துவிட்டால் ஆசிரியர் பற்றாக்குறை என்ற பேச்சே எழாது. இதன் மூலம் ஆசிரியர்கள் இல்லாத நிலைமையை செயற்கையாக ஏற்படுத்த அரசு முயற்சிக்கிறது. இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு சம்பளம் என்ற வகையில் பல கோடி மிச்சமாகிறது’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பிரித்தாளும் கொள்கையா... அது என்ன...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘எதற்கெடுத்தாலும் துறை இயக்குனர், முதன்மை கல்வி அலுவலர்கள் தான் கல்வித்துறையின் பிரச்னைகளுக்கு காரணம் என்று ஆசிரியர்கள் குற்றம்சாட்டி வந்தனர். அவர்களை பிரிக்கும் வகையில் அவர்களுக்கு இடையே பிரிவினை வாதத்தை விதைத்துள்ளது பள்ளி கல்வித்துறை. அதாவது தனிக்காட்டு ராஜாவாக, ராணியாக இருந்து வந்த தொடக்க, நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்களின் பதவி பறிக்கப்பட்டுவிட்டது. இவர்கள் தான் மேல்நிலைப்பள்ளிகளின் சங்கங்களுடன் சேர்ந்து தீவிர போராட்டத்தில் ஈடுபட்டவர்கள். இப்போது கட்டுப்படுத்த மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அந்த பதவியை தூக்கிவிட்டு பிரின்சிபால் என்ற பொறுப்பு ெகாடுத்து தொடக்க, நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களை கட்டுப்படுத்தும் அதிகாரித்தை கொடுத்துள்ளனர். ஆனால் இது தங்களை அவமானப்படுத்தும் செயலாக தொடக்க, ஒன்றிய, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கருதுகின்றனர். நாங்களே தலைமை ஆசிரியர்கள் எங்களை வேறு ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் கீழ் பணி செய்யச் சொல்வதா என்று கொந்தளித்துள்ளனர். இந்நிலையில் பிரின்சிபல் ஆன தலைமையாசிரியர்கள் கல்வித்துறையின் திட்டங்களை செயல்படுத்த முனைந்தபோது, என்னை போல் நீயும் தலைமை ஆசிரியர்தான்... எங்களை கட்டுப்படுத்தாதே என்று தமிழகம் முழுவதும் பனிப்போர் மூண்டுள்ளது. இதனால் ஆசிரியர் சங்கங்கள் பலவாக உடையும் நிலையை கல்வித்துறை அதிகாரிகள் எடுத்துள்ளனர்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘வேறு என்ன மேட்டர் இருக்கு...’’

‘‘தமிழகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தேயிலை தோட்ட தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களில், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், டான்டீ எனப்படும் அரசு தேயிலை தோட்டங்களில் பணிபுரிகின்றனர். தேயிலை தோட்ட தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, இவர்களுக்கு ஊதிய உயர்வை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிவித்தார். பத்து மாதங்கள் உருண்டோடி விட்டன. ஆனால், இன்னமும் ஊதிய உயர்வு அமலுக்கு வரவில்லை. முதல்வர் உத்தரவு காற்றில் பறந்துவிட்டது. கேட்டால் ஊதிய உயர்வு வழங்கிவிட்டோம் என்று சொல்கிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ ஆணி அடிச்ச மாதிரி 10 வருஷமாக பணியாற்றும் போலீசாரை பற்றி சொல்லுங்களேன்...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘மாங்கனி சிட்டியிலுள்ள போலீஸ் கமிஷனர் ஆபீஸ், 2 டி.சி ஆபீஸ், 4டிஎஸ்பி ஆபீஸ்களில் 30 போலீசார், பத்து வருஷமா ஒரே பணியில் இருக்காங்களாம். 3 வருஷத்துக்கு ஒரு முறை அனைவரும் மாற்றப்படும் போது, இவர்கள் மட்டும் நிலைத்திருப்பதற்கு சில அதிகாரிகளின் ஆதரவுதான் காரணமாம். இந்த 30 பேரும் அதிகார ெதானியில் ஸ்ேடஷன்களில் பணியாற்றும் போலீசாரை மிரட்டுவது, கட்டப்பஞ்சாயத்து செய்து கல்லா கட்டுவது என்று ஏகத்துக்கும் ஆட்டம் போடுறாங்களாம். அதே நேரத்தில் பகல் டூட்டி மட்டுமே பார்ப்பது, விடுமுறை நாட்களை தவறாமல் கழிப்பது என்று அதிலும் முன்னிலையில் இருக்கிறார்களாம். முன்பிருந்த கமிஷனர் இதற்கு முடிவு கட்டும் வகையில் பட்டியல் தயாரிப்பில் தீவிரம் காட்டினாராம். அவர் டிரான்ஸ்பரானதும், அந்த பட்டியல் மூலையில் கிடக்குதாம். அதனை தூசி தட்டி, இவர்களின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்டப்படுமா என்ற ஆதங்கத்தில் வலம் வருகிறார்களாம் உண்மையான காக்கிகள்...’’ என்றார் விக்கியானந்தா.

Tags:

Peter Mama

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • KimHorseRide1610

  பயேக்டு பனிமலைகளுக்கு இடையே வெள்ளைக் குதிரையில் பவனி வந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்: புகைப்படத்தொகுப்பு

 • NASASpaceSuit

  நிலவு பயணத்தில் பங்கேற்கும் விண்வெளி வீரர்களுக்கான 2 நவீன விண்வெளி உடைகள்: நாசா அறிமுகம்- புகைப்படங்கள்

 • AirQualityDelhi1610

  அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் வேளாண் கழிவுகளால் டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் காற்று மாசு: புகைப்படங்கள்

 • CatalanSpainProtest

  கட்டலான் தலைவர்களின் சிறைத்தண்டனைக்கு எதிர்ப்பு..: ஸ்பெயினின் பல்வேறு இடங்களில் வெடித்தது போராட்டம்!

 • LebanonWildFire1610

  கடுமையான வெப்பம் மற்றும் அனல் காற்றினால் லெபனானில் வரலாறு காணாத காட்டுத்தீ..: சர்வதேச நாடுகள் உதவ கோரிக்கை!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்