SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஓடும் ரயிலில் இருந்து குதித்து 3 மாத குழந்தையுடன் தம்பதி தற்கொலை

2019-09-11@ 19:02:41

சேலம்: ஊத்தங்கரை அருகே ஓடும் ரயிலில் இருந்து குதித்து, 3 மாத குழந்தையுடன் தம்பதி தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து சேலம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகேயுள்ள காக்கங்கரை-குன்னத்தூர் இடையே உள்ள ரயில்வே தண்டவாள பகுதியில் ராமகிருஷ்ணபதி என்ற இடத்தில் சுமார் 25 மதிக்கத்தக்க ஆண், 23 வயது மதிக்கத்தக்க பெண், 3 மாத பெண் குழந்தை உடல்கள் கிடந்தன. இன்று காலை வழக்கம்போல் தண்டவாள பரிசோதனை பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே ஊழியர், 3 பேர் உடல்கள் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி சேலம் ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் சேலம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து ரயில்வே இன்ஸ்பெக்டர் இளவரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினர். ஆனால் அவர்கள் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்ற விபரம் தெரியவில்லை. சடலமாக கிடந்த வாலிபரின் சட்டை பையில், கோவை அரசு மருத்துவமனையில் புறநோயாளி பிரிவில் சிகிச்சை பெற்றதற்கான துண்டு சீட்டு இருந்தது. அதில் விஜயன், வயது 25 என எழுதப்பட்டிருந்தது. மேலும் பையில் செல்போன் ஒன்றும் இருந்தது. ஆனால் அது சுவிட்ச் ஆப் செய்யப் பட்டிருந்தது. பிணமாக கிடந்த வாலிபர் சிவப்பு நிறசட்டை, நீல நிற லுங்கி அணிந்திருந்தார். இவர்கள் நரிக்குறவர்களாக இருக்கலாம் அல்லது ரயில்களில் பாட்டு பாடி பிச்சை எடுத்து வாழ்ந்து வந்தவர்களாக இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். தம்பதியினரான இவர்கள் குழந்தையுடன் நள்ளிரவில் ரயிலில் இருந்து குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என கூறப் படுகிறது. இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gujarath_111

    குஜராத் மாநிலம் சூரத்தில் 10 மாடிகள் கொண்ட ஜவுளி வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து

  • srilankaa_twinnss1

    இலங்கையில் உலக சாதனை நிகழ்ச்சியாக அதிக இரட்டையர்கள் ஒன்று கூடிய மாபெரும் நிகழ்வின் மெய்சிலிர்ப்பூட்டும் படங்கள்

  • iyesu_kudaamuu1

    இயேசு கிறிஸ்து திருமுழுக்கு பெற்ற நாள் கொண்டாட்டம் : ரஷ்யாவில் 53,000 பேர் புனித நீராடினர்

  • nirmalaa_alawaa1

    டெல்லியில் 'அல்வா' தயாரிப்புடன் மத்திய பட்ஜெட் ஆவண பதிப்பித்தல் பணியை தொடங்கி வைத்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!!

  • telanagana_leopardd1

    தெலங்கானாவில் வீட்டு மாடியில் பதுங்கிய சிறுத்தை: நீண்ட போராட்டத்திற்கு பிறகு வனத்துறையிடம் பிடிப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்