விழுப்புரம், தி.மலை, வேலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
2019-09-11@ 14:17:39

சென்னை: வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணிநேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர்,புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், நீலகிரி, கரூர், மதுரை, குமரி, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் லேசான மழை பெய்யும் என்று கூறப்படுகிறது.
மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டியுள்ள கோவை, நீலகிரி மாவட்டங்களில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக மழைக்கு வாய்ப்பு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. சென்னை நகரின் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி , குறைந்த பட்ச வெப்பநிலை 25 செல்சியசும் இருக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில்அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் 6 செ.மீ அளவுக்கு மழை பெய்துள்ளது. செஞ்சி, காவேரிப்பாக்கத்தில் தலா 5 செ.மீ மழையும், நீலகிரி ஜி.பஜார், புதுக்கோட்டையில் தலா 4 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
மேலும் செய்திகள்
வாணியம்பாடியில் ஒருதலைக்காதலால் விபரீதம் ஓடும் பஸ்சில் இளம்பெண்ணுக்கு தாலி கட்ட முயன்ற வாலிபர்
திண்டுக்கல்லில் செயல்வீரர்கள் கூட்டம் கே.எஸ்.அழகிரி முன் காங்கிரசார் கோஷ்டி மோதல்: பதவி பறிக்கப்படும் என எச்சரிக்கை
நகர்ப்புற சுகாதார மையங்களில் இரவு பணியில் டாக்டர்கள், ஊழியர்கள் இருக்கின்றனரா?: அரசு விரிவான பதில் தர ஐகோர்ட் கிளை உத்தரவு
அமைச்சர் காமராஜ் தகவல் துருக்கியில் இருந்து 500 டன் வெங்காயம் இறக்குமதி
கணவன், மனைவி தகராறில் பயங்கரம் 10 மாத பெண் குழந்தையை குப்பையில் வீசிய தாய்
சான்றிதழுக்கு 500 லஞ்சம் சுகாதார ஆய்வாளருக்கு 4 ஆண்டு சிறை
11-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசுத்தலைவர் மாளிகையை நோக்கி பேரணி சென்ற ஜேஎன்யு பல்கலை. மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்திய போலீஸார்
ஆஸ்திரேலியாவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் புதர் தீ : புகை மண்டலமாக காட்சியளிக்கும் சிட்னி நகரம்
ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி சுமார் 2000த்திற்கும் மேற்பட்ட கோலா விலங்குகள் உயிரிழப்பு
கார்த்திகை தீபத் திருவிழா : தி.மலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது