SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

wiki யானந்தா

2019-09-10@ 00:09:30

‘‘புதுச்சேரியில் அதிகார மோதல் எப்போது முடிவுக்கு வரும்னே தெரியலையே...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘புதுவையில் சிவப்பு கார்டுக்கு 20 கிலோ, மஞ்சள் கார்டுக்கு 10 கிலோ இலவச அரிசி வழங்கப்பட்டு வந்தது. கவர்னராக பெண் ஐபிஎஸ் அதிகாரியும், முதல்வராக சாமி பெயரை கொண்டவரும் பொறுப்பேற்றதில் இருந்து புதுவை மக்களுக்கு 17 மாதம் அரிசியும், 5 மாதம் அரிசிக்கு பதிலாக பணமும் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 17 மாதம் அரிசி வழங்கப்படவில்லை. கடந்த 6 மாதமாக அரிசியோ, பணமோ வழங்கப்படாமல் உள்ளது. கவர்னர், முதல்வர் ஆகியோருக்கும் உள்ள மோதலால் அரிசி வழங்காதது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இரு தினங்களுக்கு முன் முடிந்த பட்ஜெட் கூட்டத்தில் அனைத்து ரேஷன் கார்டுக்கும் இலவச அரிசி வழங்க சட்டசபையில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு, அதற்கான தீர்மான நகலை காங்கிரஸ் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்களுடன் சென்று பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் சாமியானவர் ராஜ்நிவாசில் சந்தித்து வழங்கினார். தீர்மான நகலை வாங்கிய ராஜ்பவன் பெண் அதிகாரி , அரிசி வழங்க மறுத்துவிட்டார். இது மக்கள் மத்தியில் பிரச்னை ஏற்படும் என்பதால், சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இலவச அரிசி திட்டத்தை தான் எதிர்க்கவில்லை. அரிசி தரத்தில் ஏற்படும் புகார்களை தடுக்கவே அரிசிக்கு பதிலாக பணமாக வழங்க ேவண்டும் என பதிவிட்டிருந்தார். இதற்கிடையில் யூனியன் பிரதேசமான புதுவையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் என ஐகோர்ட் தீர்ப்பளித்தது. இதனை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்துள்ளது. கவர்னர் ராஜ்நிவாஸ் பெண் அதிகாரி மேல்முறையீடு செய்துள்ளார்.

இருப்பினும் ஐகோர்ட் தீர்ப்பின்படி புதுவை அரசு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அமைச்சரவை, சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றியும் அரிசி வழங்க கவர்னர் மறுப்பு தெரிவித்துள்ளதால் அரசு சார்பில் மீண்டும் ஐகோர்ட்டை அணுகுவது என முடிவு செய்துள்ளனர். ெமாத்தத்தில் இலவச அரிசி என்பது புதுவை மக்களின் எட்டாத கனியாக உள்ளது...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘அதுல ஒரு விஷயத்தை கவனிச்சீங்களா... இலவச  அரிசியாக இருந்தாலும், பணத்துக்கு விற்றாலும் ரேஷன் கடைகளுக்கு அரிசி சப்ளையாவது மத்திய அரசின் குடோனில் இருந்துதான். அது சரியாக இருக்காது பணத்தை கொடுத்து வெளியில் வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறுவது மத்திய அரசையே குறைகூறுவது போல தெரியலையா...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘நானும் கவனிச்சேன்... மத்திய அரசை அவரே மறைமுகமாக குற்றம்சாட்டுவது போல உள்ளது. சரி திருவண்ணாமலை மாவட்ட மேட்டரை சொல்றேன் கேளு...’’ என்றார் விக்கியானந்தா.‘‘சொல்லுங்க... ‘‘திருவண்ணாமலை செங்கம் நகரில் 30 ஆண்டுகளாக அரசு போக்குவரத்துக்கழக கிளை பணிமனை இயங்கி வருகிறது. இப்பணிமனையில் திருப்பதி கடவுளின் ‘ஜி’ எழுத்தில் முடியும் பெயரை கொண்டவர் தொழில்நுட்ப பணியாளராக சேர்ந்து 23 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரிந்து வருகிறாராம். இவர் எங்கு பணியிட மாற்றம் பெற்று சென்றாலும் சில நாட்களில் மீண்டும் செங்கம் பணிமனைக்கே வந்துவிடுவாராம்.

இடையில் பதவி உயர்வு பெற்று வெளியூர் சென்றவர் ஒரே வாரத்தில் மீண்டும் செங்கம் பணிமனை கிளை மேலாளராக பொறுப்பேற்றுக் கொண்டாராம்... இங்கு இவர் வைத்ததுதான் சட்டமாம். அதோடு ஆளுங்கட்சியின் பின்புலம் இருப்பதால் உயர்அதிகாரிகள் தொடங்கி பணிமனையில் பணிபுரியும் கண்டக்டர், டிரைவர், தொழில்நுட்ப பணியாளர்கள், அலுவலர்கள் என 190 பேரையும் ஆட்டிப்படைத்து வசூல் வேட்டை ஆடி வருகிறாராம். இதுதவிர பணிமனை கேன்டீனும் இவரது கட்டுப்பாட்டில்தான் இயங்கி வருகிறதாம். தனிக்காட்டு ராஜாவாக வலம் வரும் இவரை பார்த்தாலே ஊழியர்கள் தலைதெறிக்க ஓட்டம் பிடிக்கிறார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ஊழியராக இருந்தாலும் கரை வேட்டி பின்புலம் இருந்தால் அதிகாரிகள் எல்லாம் அடங்கி போக வேண்டியதுதான். ஆசிரியர்கள் மேட்டர் ஏதாவது இருக்கா...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு வட்டார கல்வி பெண் அலுவலர்களின் வசூல் வேட்டைதான் இப்போது ஆசிரியர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இதில் இரண்டு பெண் அலுவலர்கள்  பேரணாம்பட்டில் அங்கீகாரம் பெறாத தனியார் பள்ளிக்கு ஆய்வுக்கு சென்றவுடன், எதையாவது குறையை கண்டுபிடித்து கல்லா கட்டி வருகிறார்களாம். மேலும்  அங்கீகாரம் பெறாத பெரிய பள்ளிகளுக்கு ஆய்வுக்கு செல்வதாக இருந்தால் இனிப்புடன் சூப்பர் சாப்பாடு, வீட்டுக்கு பார்சல் என்று அவர்கள் செய்யும் அலப்பறைக்கு அளவே இல்லையாம். ஏசி கார் அந்த அலப்பறை பட்டியலில் முதலில் இருக்குமாம். திருப்பதி கடவுள் பெயர் கொண்ட வட்டார கல்வி அலுவலரை அரசுப்பள்ளிகளை கவனிக்க சொல்லிவிட்டு இந்த இரண்டு பெண் அலுவலர்களும் அங்கீகாரம் பெறாத தனியார் பள்ளிகளாக பார்த்து வசூல் வேட்டையில் ஆடி வருகிறார்களாம்.  குறிப்பாக அங்கீகாரம் வாங்கித்தருவதாக கூறி பெரிய அளவில் வசூல் செய்து விடுகிறார்களாம். இதனால் அங்கீகாரம் பெறாத பல பெரிய பள்ளிகள் இவர்களிடம் பணத்தை பறிகொடுத்து விட்டு அங்கீகாரம் வருமா. வராதா என்று ஏக்க பெருமூச்சு விட்டு காத்திருக்கிறார்களாம்...’’ என்று வேதனையோடு சொன்னார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • KimHorseRide1610

  பயேக்டு பனிமலைகளுக்கு இடையே வெள்ளைக் குதிரையில் பவனி வந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்: புகைப்படத்தொகுப்பு

 • NASASpaceSuit

  நிலவு பயணத்தில் பங்கேற்கும் விண்வெளி வீரர்களுக்கான 2 நவீன விண்வெளி உடைகள்: நாசா அறிமுகம்- புகைப்படங்கள்

 • AirQualityDelhi1610

  அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் வேளாண் கழிவுகளால் டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் காற்று மாசு: புகைப்படங்கள்

 • CatalanSpainProtest

  கட்டலான் தலைவர்களின் சிறைத்தண்டனைக்கு எதிர்ப்பு..: ஸ்பெயினின் பல்வேறு இடங்களில் வெடித்தது போராட்டம்!

 • LebanonWildFire1610

  கடுமையான வெப்பம் மற்றும் அனல் காற்றினால் லெபனானில் வரலாறு காணாத காட்டுத்தீ..: சர்வதேச நாடுகள் உதவ கோரிக்கை!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்