SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரூ.4.95 லட்சத்தில் புதிய ரெனோ டிரைபர் 7 சீட்டர் கார்

2019-09-08@ 00:08:37

நம்ப முடியாத ஆரம்ப விலையில் புதிய ரெனோ டிரைபர் 7 சீட்டர் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்புதிய ரெனோ டிரைபர் கார் 4 மீட்டர் நீளத்திற்குள், 7 பேர் பயணிக்கும் வசதி கொண்ட மினி எம்பிவி ரக கார் மாடலாக வந்துள்ளது. இந்த கார், RXE, RXL, RXT மற்றும் RXZ ஆகிய 4 வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும். இந்த கார், 7 சீட்டர் மாடலாக வந்தாலும், மூன்றாவது வரிசையில் சிறியவர்கள் மட்டுமே பயணிக்கலாம். அதே நேரத்தில், 5 சீட்டர் மாடலாக பயன்படுத்தும் வசதியையும் இந்த கார் பெற்றுள்ளது. அதாவது, கடைசி வரிசையில் இரண்டு இருக்கைகளை எளிதாக கழற்றி மாட்ட முடியும். கருப்பு மற்றும் பீஜ் வண்ணத்திலான இரட்டை வண்ண இன்டீரியர் தீம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த காரின் உட்புறமும் மிக அழகாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. 8 அங்குல தொடுதிரையுடன்கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. இந்த சிஸ்டம் நேவிகேஷன், புஷ் டு டாக், வீடியோ பிளேபேக் வசதி (கார் நிற்கும்போது மட்டும் செயல்படும்), ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்கிறது.

இந்த காரில், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், கூல்டு கிளவ் பாக்ஸ், இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசை இருக்கை பயணிகளுக்கு தனி ஏசி வென்ட் இடம்பெற்றிருப்பதும் முக்கிய அம்சங்களாக உள்ளது. இந்த காரில் 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 71 பிஎச்பி பவரையும், 96 என்எம் டார்க் திறனையும் வழங்குகிறது. 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் வந்துள்ளது.
இந்த காரின் டாப் வேரியண்ட்டில் 4 ஏர்பேக், இதர வேரியண்ட்களில் டியூவல் ஏர்பேக் கொடுக்கப்பட்டுள்ளன. இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், சீட் பெல்ட் ரிமைன்டர் வசதி, ஹை ஸ்பீடு அலர்ட், ரியர் பார்க்கிங் சென்சார் மற்றும் ரியர் பார்க்கிங் கேமரா (ஆப்ஷனல்) உள்ளிட்ட பல பாதுகாப்பு அம்சங்களை பெற்றுள்ளது. ஐஸ் கூல் ஒயிட், மூன்லைட் சில்வர், எலெக்ட்ரிக் புளூ, பியரி ரெட் மற்றும் மெட்டல் மஸ்டர்டு ஆகிய 5 வண்ணத்தேர்வுகளில் கிடைக்கிறது. இதில், பியரி ரெட் இதன் விசேஷ வண்ணத்தேர்வாக உள்ளது. இந்த கார், ₹4.95 லட்சம் முதல் ₹6.49 லட்சம் வரை (டெல்லி எக்ஸ்ஷோரூம்) விற்பனை செய்யப்படுகிறது. ₹11,000 முன்பணத்துடன் டீலர்களிடம் முன்பதிவு நடந்து வருகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 11-12-2019

  11-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • jnu_studentss1

  குடியரசுத்தலைவர் மாளிகையை நோக்கி பேரணி சென்ற ஜேஎன்யு பல்கலை. மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்திய போலீஸார்

 • bushfire_aussiee1

  ஆஸ்திரேலியாவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் புதர் தீ : புகை மண்டலமாக காட்சியளிக்கும் சிட்னி நகரம்

 • asutra_bushfirr1

  ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி சுமார் 2000த்திற்கும் மேற்பட்ட கோலா விலங்குகள் உயிரிழப்பு

 • parani_deepam11

  கார்த்திகை தீபத் திருவிழா : தி.மலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்