SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாஸ்து சரியில்லாததால் குடும்பத்தோடு முகாமில் இருந்து வெளியேறிய காவல் துறை உயரதிகாரி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2019-09-07@ 00:16:07

‘‘சுற்றுலா போயிட்டு வரலாமா...’’ என்று சிரித்தபடி கேட்டார் பீட்டர் மாமா.
‘‘நான் சென்னையை விட்டு இப்போதைக்கு எங்கும் நகர மாட்டேன்...’’ என்று முரண்டு பிடித்தார் விக்கியானந்தா.
‘‘சென்னையில் உள்ள சுற்றுலா தலத்துக்குதான் அழைத்தேன்... அது எந்த இடம்னு கண்டுபிடிங்க...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘சேலம்காரர் வெளிநாட்டுக்கு போயிட்டாங்க... சில மந்திரிகளும் வெளிநாட்டுக்கு போயிட்டாங்க... சில மந்திரிகள் தங்கள் துறை மற்றும் தொகுதியில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு போயிட்டாங்க... முக்கிய அதிகாரிகள் யாரும் கோட்டையில இல்ல. இதனால சில அதிகாரிகள், ஊழியர்களை பார்க்க அவர்களது நண்பர்கள் கோட்டைக்கு அழைத்து வந்து அலுவலகத்தில் அமர்ந்து டீ, ஜூஸ் குடித்துவிட்டு ஜாலியாக பேசிவிட்டு செல்கிறார்கள். அதிகாரிகளிடம் செல்வாக்குள்ள கரைவேட்டிகள் மட்டும் வழக்கம்போல வந்து காரியத்தை சாதித்துவிட்டு மொய் எழுதிவிட்டு செல்கிறார்களாம். அவர்களும் சும்மா தானே இருக்கீங்க வாங்க காலார நடந்துட்டு வரலாம்னு அழைத்து வந்துவிடுகிறார்களாம். அருகில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ஹாயாக ஒரு காபி குடித்துவிட்டு மீண்டும் காரிலேயே கோட்டைக்கு வந்துவிடுகிறார்களாம். சில அதிகாரிகள் மதிய உணவுக்கு பிறகுதான் கோட்டைக்கே வருகிறார்களாம். கீழ் நிலை அதிகாரிகள் மட்டும் தினமும் வந்து வழக்கமான பணிகள் இல்லாத காரணத்தால் பழைய பைல்களை தூசுதட்டி ஏதோ வேலை பார்க்கிறார்களாம்... இதுபோன்ற காட்சிகளை பார்க்க தானே கோட்டைக்கு அழைக்கிறீங்க...’’ என்று கலாய்த்தார் விக்கியானந்தா.
‘‘வாஸ்து பார்த்தா வருமானம் வருமா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘வருமானம் வருமானு தெரியாது... ஆனால் குடும்பத்துக்காக அந்த ரிஸ்கையும் எடுக்கலாம். நாகை மாவட்ட எஸ்பி முகாம் அலுவலகம் புதிய கடற்கரை சாலை செல்லும் வழியில் உள்ளது. எஸ்பியாக பதவியில் இருப்பவர்கள் இந்த முகாம் அலுவலகத்தில்தான் தங்கி இருப்பார்களாம். சில எஸ்பிக்கள் தங்களது வசதிக்கு ஏற்ப சில மாற்றங்களை செய்து கொள்வார்கள். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நாகை காவல்துறைக்கு பொறுப்பேற்ற எஸ்பி, முகாம் அலுவலகத்திற்கு சென்றவுடன் அதிர்ச்சியடைந்தாராம். உடனே ெபாதுப்பணித்துறை அதிகாரிகளை அழைத்து இந்த குடியிருப்பு வாஸ்து சரியில்லை. நான் குடும்பத்தோடு நீண்ட நாட்களாக நாகையில் எப்படி பணியாற்ற முடியும் என்று டோஸ் விட்டாராம். வாஸ்து சரி செய்ய எவ்வளவு நாட்கள் ஆகும் என்று கேட்டாராம். அதற்கு ெபாதுப்பணித்துறை அதிகாரிகள் பதில் சொல்லாததால் கோபம் அடைந்த எஸ்பி, முகாம் அலுவலகத்தில் தங்காமல் வெளியேறினார். சில உயர் அதிகாரிகளின் ஆலோசனையின்படி, நாகூரில் உள்ள மத்திய அரசுக்குகீழ் செயல்படும் சென்னை பெட்ரோலிய கார்ப்பரேசன் லிமிடெட் கெஸ்ட்அவுசில் குடும்பத்தோடு குடியேறியுள்ளார்... எஸ்பி அங்கு தங்குவதற்கு என்ன காரணம் என்று கேட்டால் தொடர்ந்து எண்ணை குழாய் பதிப்பதில் ஏற்படும் பிரச்னையை சரிசெய்வதற்காக எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக தங்கியிருப்பதாக மழுப்பலாக பதில் தெரிவிக்கிறாராம். இந்த முகாம் அலுவலகத்தில் எஸ்பி தங்கியிருந்தால் பொதுமக்கள் அவரை எந்த நேரமும் சந்தித்து மனு கொடுத்து தீர்வு காண முடியும். ஆனால் எஸ்பி, மத்திய அரசு கெஸ்ட்அவுசில் தங்கியிருப்பதால் பொதுமக்கள் யாரும் அங்கு செல்ல முடியவில்லை.
நாகை மாவட்டத்தில் பல எஸ்பிக்கள் தங்கிய முகாம் அலுவலகம் தற்போது இருள் அடைந்து உள்ளதாம். முகாம் அலுவலகத்தில் எஸ்பி இல்லாத காரணத்தால் அங்கு பாதுகாவலர்கள் இல்லை. இரவு நேரங்களில் விளக்கு போடுவதற்கு கூட பணியாளர் இல்லை. பல எஸ்பிக்கள் தங்கி கம்பீரமாக காட்சி அளித்த முகாம் அலுவலகம் இந்த நிலைக்கு சென்றதற்கு காரணம் வாஸ்துதான் சரியில்லையாம்.. அதனால்தான் அவர் அங்கு தங்கவில்லை என்று போலீஸ் வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தனியார் கல்லா கட்ட... இலவச கழிவறைகளை பூட்டிய கோவை அதிகாரிகளை பற்றி சொல்லுங்களேன்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கோவை மாநகராட்சி சார்பில், காந்திபுரம் டவுன் பேருந்து நிலையம் அருகே 2017ம் ஆண்டு 30 லட்சம் மதிப்பில் நவீன கழிப்பறை கட்டப்பட்டது. டைல்ஸ் கற்கள் பதிக்கப்பட்டு, பிரத்தியேக கழிப்பறை, குளியலறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிப்பறைக்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவது இல்லை. காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டும் இந்த கழிப்பறை திறந்திருக்கும். இதனை பராமரிக்க தனியார் காவலர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். மாற்றுத்திறனாளிகளும் இந்த கழிப்பறையை பயன்படுத்த முடியும். அதேநேரத்தில், காந்திபுரம் பேருந்து நிலையத்திற்கு உட்புறத்தில் இரண்டு பழைய கட்டண கழிப்பறைகள் உள்ளன. இவை தனியாருக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. இந்த இரு கழிப்பறைகளிலும், மாநகராட்சி சார்பில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், தனியார் ஒப்பந்ததாரர்கள் அதைவிட இரண்டு மடங்கு அதிகமாக வசூலிக்கிறாங்க... பொதுமக்கள் யாராவது கேட்டால் இஷ்டம் இருந்தால் நாங்கள் கேட்கும் பணத்தை கொடுத்துட்டு உள்ளே போ... இல்லை தெருவில் போய் உங்கள் பிரச்னைகளை தீர்த்து கொள்ளுங்கள் என்று சொல்கிறார்களாம். இது குறித்து நிறைய புகார்கள் சென்றும் மாநகராட்சி அதிகாரிகளை, ஒப்பந்ததாரர்கள் நன்கு ‘கவனிப்பதால்’ இந்த கட்டண கொள்ளையை, அவர்கள் கண்டுகொள்வதில்லையாம்.  இதனால் வெறுத்துப்போன பொதுமக்கள் தலையில் அடித்து கொண்டபடி எதில் எல்லாம் லஞ்சம் வாங்கலாம் என்ற விவஸ்தையே இல்லை என்று புலம்பியபடியே சென்றனர்...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 26-05-2020

  26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 25-05-2020

  25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 24-05-2020

  24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-05-2020

  23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-05-2020

  23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்