SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோடிக்கணக்கில் வரி பாக்கி வைத்துள்ள ஓட்டலும் மாமூல் வாங்கி சாப்பிட்ட அதிகாரிகளும் கலக்கத்தில் உள்ள கதையை சொல்கிறார்: wiki யானந்தா

2019-09-05@ 00:31:35

‘‘கோவையில் ஒரு ஓட்டல் கலக்கத்தில் இருக்குதாமே.. அது என்ன விஷயம்...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கோவை மாநகராட்சியில் நீண்ட காலமாக சொத்து வரி பாக்கி வைத்துள்ளவர்கள் பட்டியலை, மாநகராட்சி கமிஷனர் சமீபத்தில் புரட்டிப்பார்த்தார். அப்போது, மாநகரில் ஒரு பிரபல ஓட்டல் நிர்வாகம் 1.7 கோடி சொத்து வரி பாக்கி  வைத்திருப்பதை பார்த்து அதிர்ந்து போய்விட்டார். அதிகாரிகளை அழைத்து டோஸ் விட்டார். ‘இவ்வளவு பாக்கி ஏறும் அளவுக்கு என்ன செய்துகொண்டு இருந்தீர்கள்’ என ஒரு பிடி பிடித்துவிட்டார். உடனடியாக வரிப்பாக்கியை  வசூலிக்காவிட்டால், சஸ்பெண்ட், டிரான்ஸ்பர் என பல நடவடிக்கை பாயும் எனவும் எச்சரித்தார். அவ்வளவுதான் தாமதம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பைலுடன், அந்த ஓட்டலுக்கு விரைந்தனர். ஓட்டல் நிர்வாகிகளிடம் காலில் விழுந்தனர். ‘நீங்கள்  சொத்து வரி பாக்கியை செலுத்தாவிட்டால், நாங்கள் காலி'' என கதறினர். இதையடுத்து, ஓட்டல் நிர்வாகிகள், முதல்கட்டமாக 30 லட்சம் ரூபாய்க்கு செக் கொடுத்தனர். மீதி தொகையை 20 தவணைகளில் தருவதாக உறுதியளித்தனர். இதை அப்படியே கமிஷனரிடம் நேரில் தெரிவித்தனர். அவரோ, மீண்டும் மிரட்டல்  விடுத்தார். மீண்டும் ஓட்டலுக்கு ஓடிப்போன அதிகாரிகள், ‘செல்லாது... செல்லாது... இன்னும் மூன்றே தவணையில் மீதமுள்ள வரிப்பாக்கியை செலுத்திவிட வேண்டும், இல்லையேல் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும், விதிமீறல்  கண்டறியப்பட்டு, கட்டடம் இடிக்கப்படும்’ என எச்சரிக்கை விடுத்தனர். இதனால், ஓட்டல் முதலாளிகள் பெரும் கலக்கத்தில் உள்ளனர். மாமூல் வாங்கி சாப்பிட்ட அதிகாரிகள் சிக்கலில் மாட்டி தவிக்கின்றனர். இந்த விவகாரம் கோவை  மாநகராட்சி வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது’’ என்றார் விக்கியானந்தா.

‘‘வேலூர் மாவட்டத்தில் தற்போதைய நிலவரப்படி, ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருக்கும் பகுதி காட்பாடிதானாமே..’’ என்று கேட்டபடி வந்தார்.‘‘ஆமா..இந்த சாதனையை வேறு யாரும் முறியடிக்காத வகையில், நாளுக்கு நாள் புற்றீசலாக புதிய ஆக்கிரமிப்புகள் முளைத்து கொண்டே செல்கிறது. குறிப்பாக காட்பாடி உழவர் சந்தையில் தொடங்கி, வள்ளிமலை கூட்ரோடு வரை  ஆக்கிரமிப்புகளுக்கு பஞ்சம் கிடையாது. இந்த அரை கிலோமீட்டரை கடந்து செல்ல வாகன ஓட்டிகள் அரை நாள் கூட காத்திருக்கும் அளவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் முயற்சியில் நெடுஞ்சாலைத்துறை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே அடி எடுத்து வைத்தது. ஆனால், ரவுடிகள் மிரட்டலுக்கு பயந்து பின்வாங்கிவிட்டார்களாம். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் மாநகராட்சி  நிர்வாகத்துக்கும் அதிகாரம் இருக்கிறது. ஆனால், அவர்களாலும் முடியவில்லை என்று கூறிவிட்டனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற செல்லும்போது நடக்கும் அடாவடிகளையெல்லாம் போலீசார் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். காரணம் அவர்களது முழு ஆசியுடன் தான் இந்த ஆக்கிரமிப்புகள் அரங்கேறி உள்ளதாக பேசப்படுகிறது.

இதுபற்றி கேட்டால் போலீசாரோ, எங்களுக்கு எழுத்து பூர்வமாக கடிதம் கொடுத்துவிட்டால், நிச்சயம் பாதுகாப்பு கொடுப்போம் என்று கூறுகின்றனர். இப்படி அதிகாரிகளின் ஆள்காட்டி விரல்கள் மற்ற துறைகள் பக்கம் நீள்கிறது. மொத்தத்தில் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் யார்தான் பொறுப்பு என்பது தெரியாமல் மக்கள் விழிபிதுங்கி வருகின்றனர். இதுதொடர்பாக சில மாதங்களுக்கு  முன்பு பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கும் புகார் அனுப்பி வைத்தார்களாம். ஆனால், மாவட்ட நிர்வாகமும் இந்த விவகாரத்தில் மவுனம் சாதிக்கிறது.மொத்தத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் முட்டுக்கட்டை போடுபவர்கள் யார், அந்த பூனைக்கு மணி கட்டுவது யார் என்பதே மக்களின் தற்போதைய தவிப்பாக உள்ளது’’ என்றார் விக்கியானந்தா. ‘‘காவல்துறை சேதி ஏதுமிருக்கா..’’ ‘‘மாங்கனி மாநகர போலீஸ் டிபார்ட்மென்ட்ல தினசரி புகாருக்குள்ளாகுற இன்ஸ்பெக்டர்கிட்ட எந்த விசாரிப்பும் இல்லாதது தான் ஹாட் டாபிக்கா போயிட்டு இருக்காம். லோக்சபா எலக்சன் அப்போ, பள்ளப்பட்டி இன்ஸ்பெக்டரா புதுசா ஒருத்தர  அபாயிண்ட்ெமன்ட் போட்டாங்க. சாரு, சார்ஜ் எடுத்துக்கிட்டதுல இருந்து திருநங்கைகள், ரோட்டோர வியாபாரிங்க, கம்ப்ளைண்ட் கொடுக்க வந்த பப்ளிக், டிஒய்எப்ஐ காரங்கன்னு பல தரப்பினர் கிட்டயும் ஏழாம் பொருத்தமாவே போகுதாம்.

 சமீபத்துல கூட புகார் கொடுக்க வந்த ஆட்டோ டிரைவர கடுமையா திட்டுனதால, அவரு மனைவியோட கலெக்ட்ரேட் முன்னாடி தீக்குளிக்க வந்த விவகாரம் பரபரப்பா போச்சு. அதுக்கு முன்னாடி ெவள்ளி திருடுனவன் மேல புகார் கொடுக்க  வந்தவங்களையே சாரு ஒரு கை பாத்துட்டாரு. இதனால அதிருப்தியான டிஒய்எப்ஐ காரங்க இன்னைக்கு மாநில தலைவர கூட்டிட்டு வந்து, இன்ஸ்பெக்டருக்கு எதிரா ஆர்ப்பாட்டம் பண்ண ேபாறாங்க. ஆரம்பத்துல இருந்தே இந்த எல்லா  விவகாரத்துலயும், இன்ஸ்பெக்டர் மேல ஆகஷன் எடுங்கனு, கமிஷனர் ஆபிசுக்கு புகாரும் போச்சு. ஆனா இதெல்லாம் என்னன்னு கூட, சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் கிட்ட கேட்கலயாம். என்ன நடக்குதுனு புரியாம, மத்த காக்கிங்க தடுமாறிட்டு  இருக்காங்களாம்’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-02-2020

  23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • theepam2020

  மகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்

 • 22-02-2020

  22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • UkraineCoronaProtest

  கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்!

 • puthu2020

  அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்